தமிழ் கவிதைகள்

KalpanaBharathi
May 03, 2016 09:44 முப
முல்லைக்கு தேர் தந்தான் பாரிவள்ளல் முல்லைக்கு பாடல் தந்தான் சொல்வள்ளல்கவிஞன் முல்லைக்கு உன்னிதழிலே இடம் தந்தாய் நீ வள்ளல்களையும் விஞ்சிய புன்னகை வல்லி நீதான் ! ~~~கல்பனா பாரதி~~~
KalpanaBharathi
May 03, 2016 09:32 முப
பூக்கள் சிரித்தால் தோட்டத்தில் இளவேனில் புன்னகையில் நீ சிரித்தால் மனவீதியில் காதல் அழகு சிரிக்கும் இடம் இறைவன் ஆலயம் அன்பு மலரும் இடம் இதயப் புத்தகம் ! ~~~கல்பனா பாரதி~~~
KalpanaBharathi
May 03, 2016 08:53 முப
தென்றல் வருகை தந்த போது வெய்யில் இளவேனில் ஆனது தென்றல் வீசிய போது நெஞ்சில் கவிதை மலர்ந்தது நீ இன்னும் வரவில்லையடி சகி ! தென்றலையும் கவிதையையும் வைத்து நான் என்ன செய்வது ? ~~~கல்பனா பாரதி~~~
KalpanaBharathi
May 03, 2016 08:37 முப
உதகை கோடைக் குளிர்ச்சிக்கு உவமை உன் உதடுகள் என் காதல் கானலுக்கு உதகை உன் ஓரவிழி காதலின் பனிப் பொழிவு உன் இதழ்ப் புன்னகை உதகை மலர்க் காட்சி ! ~~~கல்பனா பாரதி~~~
KalpanaBharathi
May 03, 2016 08:19 முப
கனவோடு நடக்கும் இரவு கவிதையோடு விரியும் காலை நினைவுகள் நிறங்களில் விரியும் நாட்கள் இவையெல்லாம் மாலையில் கைகோர்த்து நீ என்னுடன் நடக்கும் காரணத்தால் !  
மேலும் தரவேற்று