வெண்பா

samiii's படம்

தேனூறும் வெண்பா தெளிந்த செழுந்தமிழில்
நானூறு தந்திடுவேன் நன்றாக --- காணூறும்
ஆன்பால் கறந்தே அதனோடு பாகுபருப்
பானயிவை யாவும் கலந்து!!

வருகவந் தென்னோடு வாகாய் வடித்துத்
தருக திரியிதனில் தண்மை --- பெருகிவரும்
நல்ல தமிழ்வெண்பா நாளும் மகிழ்ந்திடுவோம்
வெல்க உலகில் தமிழ்.

0
No votes yet
Your rating: None

கருத்துகள்

annaa's படம்

நண்பா அருமை...!! மிக‌

நண்பா அருமை...!! மிக‌ அருமை..!!
"
அழகுத்தமி ழின்புற்றிட அருமைத்தமிழ் பின்பற்றிட‌
விழ‌லில்லை இதுவுமொரு விளையாட்டு மில்லைய‌ப்பா..!!!
க‌ழ‌லினிலே புற‌ப்ப‌ட்டு காற்றை நிறைக்குமிதை
பழகிட‌வே தானங்கோடி பெறும்..!!!
"
ந‌ண்ப‌ரே வ‌ருக‌..!!வெல்க‌ த‌மிழ்..!!

" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
http://puthuvithai.blogspot.com/

samiii's படம்

நன்றி

நன்றி

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்

jeyakanthan's படம்

அண்ணாமலையை தொடர்ந்து நானும்

அண்ணாமலையை தொடர்ந்து நானும்

samiii's படம்

நன்றி

நன்றி

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்