amazysara's படம்

தோழி.....

தோழி.....
காதலியாகி கைபிடித்தல்
மிக பிடித்த திருப்பம்....!!

காதலி....
தோழியாகி பிரிவது
மிக பெரிய வருத்தம்...!!
***********************************
தோழிகள் .....
பார்க்க வராவிட்டாலும்
தொலைவிலிருந்து
பாராட்ட மறப்பதில்லை...!!
***************************************
கைகுழந்தையோடு எதிர்வரும்
தோழியிடம்
எல்லாம் விசாரிக்கும் மனசு....அவள்
'காதலை' மறந்தும் விசாரிக்காது
வலி புரிந்து.....!!
****************************************
நண்பனுக்கு..
"பிறந்தநாள் வாழ்த்து"
குறுஞ்செய்தியில் அனுப்பிய அடுத்த நொடி
அனுப்பிய செய்தியை
அழித்து விடும் 'மணமான தோழியின்'
அவலத்தை
"ஆண்வர்க்கம்" அறிந்து கொள்ளுமோ..?

5
Your rating: None Average: 5 (2 votes)

கருத்துகள்

smariappan's படம்

(No subject)


4

Clap Clap Clap


mari


kumaran's படம்

(No subject)


6

Clap


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.