நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
தாள்பணிந்தே நடப்பேன்
கூன்விழுந்து கிடந்தாலும் இன்பத்தமிழ்க்
கொஞ்சுகவி படிப்பேன்
வானெழுந்த வெயில்போயும் காலையிலே
வந்துவிடு வதைப்போல்
போனதுபோ லிருப்பேன் பின்னால்வந்து
போற்றித் தமிழ்படிப்பேன்
தேனொழுகும் கனிக்காய் பெற்றவரைச்
சுற்றிய ஐங்கரன்போல்
நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
கோவிலைத்தான் சுழல்வேன்
தேன்மலரைச் சுழன்றாடும் வண்டெனவே
தீந்தமிழ் சுற்றிநிற்பேன்
மீனெழுந்து துள்ளும்மேலே மீண்டுமது
நீரினில் தானேவிழும்
மின்னலிடு மேகம்செல்லும் மழைமீண்டும்
மெல்லத் திரும்பிவரும்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
சொல்லமறந் தொருகால்
மென்தமிழில் பணிசெய்ய மறந்திந்த
மேனி கிடந்திடுமோ
கற்றிடுவேன் தமிழ்ச்சொல்லை எடுத்தெங்கு
வைப்பதென அறிய
சொற்றமிழைக் கட்டும் வித்தகனாயொரு
சுந்தரப் பாட்டிசைக்க
பெற்றவளை விட்டுப்போவ துவோபுத்தி
கெட்டு மறுகுவனோ
சற்றும்அயரேன் சத்தம்செய்யே னென்று
கத்திக்கத்திச் சொல்லுவேன்
கருத்துகள்
நானெழுந்து நடந்தாலுந்
நானெழுந்து நடந்தாலுந் தமிழன்னை
தாழ்பணிந்தே நடப்பேன்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
சொல்லமறந் தொருகால்
மென்தமிழில் பணிசெய்ய மறந்திந்த
மேனி கிடந்திடுமோ
நல்ல வரிகள்
பாரதியின் தமிழ் பற்று தங்கள் கவிதையிலும் தெறிக்கிறது..
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
மிகவும் இனிமையான சொற் சுவை.
மிகவும் இனிமையான சொற் சுவை. நல்லாயிருக்கு.
சந்துரு
மீனெழுந்து துள்ளும்மேலே
மீனெழுந்து துள்ளும்மேலே மீண்டுமது
நீரினில் தானேவிழும்
மின்னலிடு மேகம்செல்லும் மழைமீண்டும்
மெல்லத் திரும்பிவரும்
என்னமன மெடுத்தாயினும் இன்தமிழ்
சொல்லமறந் தொருகால்
மென்தமிழில் பணிசெய்ய மறந்திந்த
மேனி கிடந்திடுமோ
அருமையான வரிகள்
உங்களின் தமிழ் பற்றை இந்த கவிதையில் நன்றாக வெளிப்படுத்தி இருகிறிர்கள்
"Direction is more important than speed.
We are so busy looking at our speedometers that we forget the milestone"
நானிலம் சுற்றுவதாய்
நானிலம் சுற்றுவதாய் சொல்லியிங்கே
நல்லோரைச் சுற்றிடுவேன்
வானுறை தெய்வவலம் செய்யவெண்ணி
கோவிலைத்தான் சுழல்வேன்
தேன்மலரைச் சுழன்றாடும் வண்டெனவே
தீந்தமிழ் சுற்றிநிற்பேன

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
என் தாய்த்தமிழை எழுச்சி
என் தாய்த்தமிழை எழுச்சி பாடல்களாய் உலகிற்கு
உயிர்த்தெழுப்பிய பாரதி ,பாவேந்தர் தமிழ் வாசம் உங்கள் வரிகளில்
வாழ்க வளமுடன் தமிழுடன் நீங்களும்.......
என்றும் கவியுடன்
அ.செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
மிகவும் அருமை...
மிகவும் அருமை...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..










