vinoth's படம்

தூழ்நிலை: தகவல் தொழில் நுட்பம் பயன்கள் மற்றும் தொல்லைகள்.

========================

கைப்பேசி குறுந்தகவலில் ஆரம்பித்த காதல்
கைப்பேசியில் எடுத்த நீலப்படத்தில் முடிந்தது...

--
அச்சு

========================

பக்கத்திலிருந்தாய்
சினுங்கினாய்
அமைதி என்றேன்
அதிர்ந்தாய்
பேசாதே என்றேன்
எழுத்தில் வந்தாய்
அடங்கு என்றேன்
நிற வெளிச்சத்தில்
மின்னினாய்
என்ன சொன்னாலும் கேட்டதில்லை நீ
தண்டனையாய் தவிர்த்தேன்
உனக்கான சக்தி வழங்கவில்லை
அமைதியாய் இருக்கிறாய் நீ
தனிமையில் நான்
என் இனிய செல்பேசி!

--
தேனுஷா ஈஸ்வரம்

========================

தொழிலும் நுட்பமும்
================
அந்த நாள் ஞாபகம்
ஆசையுடன் விசாரிக்கும் வீட்டாளுக
பைநிறைய கடிதாசியுமாய்
என் கால் படாத வீதியில்லை
என் கைப்படாத எழுத்தில்லை
மாசாமாசம் சுப்புவின்
கடிதாசி பார்த்தா
முதல் சந்தோஷம் எனக்குத்தான்,
ஓடோடிப் போனா
கடவீதி கண்ணம்மாப்பாட்டி
காத்திருப்பா வச்ச கண்வாங்காம
படிச்சுக்காட்டி முடிச்சாலும்
மோரு குடிக்கவச்சு மூணுதரம்
படிக்க வச்சிடுவா பாட்டி
அடுத்தது காணும்வரை அவ
முந்தானையில் ஒட்டியிருக்கும்
அந்தக்கடிதாசியும் சில கண்ணீர்த் துளியும்
மகன் அனுப்பும் பணம் வேண்டாம் அவளுக்கு
ஓஞ்சிருக்கத் தெரியாத நாட்டுக்கட்டை
கட்டையில போயி வருசமாச்சி
காலம்மாறிப் போச்சி
கிராமத்துக்கும் வந்தாச்சி
கணினியாம் கைப்பேசியாம்
கடிதாசி காத்திருக்க நாதியில்ல
இருந்தும்
ஓரிரண்டு கடிதாசியும் கொண்டு
இன்னும் நடக்கிறேன்
நான் கால்கடுக்க...

--
வினோத் கன்னியாகுமரி

========================

நன்றி பாலாஜி, அச்சு, தேனுஷா
இவர்களுடன் நானும்

5
Your rating: None Average: 5 (3 votes)

கருத்துகள்

syedali's படம்

கிராமத்துக்கும்


5

கிராமத்துக்கும் வந்தாச்சி
கணினியாம் கைப்பேசியாம்
கடிதாசி காத்திருக்க நாதியில்ல
இருந்தும்
ஓரிரண்டு கடிதாசியும் கொண்டு
இன்னும் நடக்கிறேன்
நான் கால்கடுக்க...

தபால்காரனின் நேற்றைய சூழலும் காலத்தின் அறிவியல் மாற்றத்தால் இன்றைய சூழ்நிலையையும் மிக அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள் Clap

அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


vinoth's படம்

மிக்க நன்றி


5

மிக்க நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


saravanamuthu's படம்

ஓரிரண்டு கடிதாசியும்


5

ஓரிரண்டு கடிதாசியும் கொண்டு
இன்னும் நடக்கிறேன்
நான் கால்கடுக்க... Clap
------------------------