dharshi's படம்

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை
****************************************
கலிவிருத்தம்

வேத மாகமம் வேறும் பலப்பல
வோதி நாளு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே. 1

புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்லவ ராயிற் சுருதி விதித்திடு
நல்ல வாகு நவையென் றகற்றிய
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே. 2

நாக்கி னானு நயனங்க ளானுமிவ்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினை
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே. 3

சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாகத மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே. 4

வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழவுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே. 5

தீய நாளொடு கோளின் செயிர்தவு
நோய கன்றிடு நூறெனக் கூறிய
வாயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே. 6

வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
றிரிந்து காப்பன் சிவசிவ வென்மினே. 7

முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலாற்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே. 8

நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வா
னீச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றுப
தேச நூல்கள் சிவசிவ வென்மினே. 9

எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவு
முண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன்
றிண்ண மீது சிவசிவ வென்மினே. 10

அறுசீர்க் கழிநெடிலடி ஆசியவிருத்தம்
********************************

இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங் கொலைவேட
னெனினும் பொல்லாப்
பழிமருவு பதகனெனி னும்பதித னெனினுமிகப்
பகரா நின்ற
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்றொருமுறைதான்
மொழியி லன்னோன்
செழியநறு மலரடியின் றுகளன்றோ வெங்கள்குல
தெய்வ மென்ப. 11

- திருச்சிற்றம்பலம் -

- சிவநாம மகிமை முற்றிற்று -

7
Average: 7 (2 votes)
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

VISWAM's படம்

ஓம் நமச்சிவாயா. இதற்குள்


0

ஓம் நமச்சிவாயா. இதற்குள் உலகமே அடங்கும்.

dharshi's படம்

நன்றி அய்யா


0

நன்றி அய்யா


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/