282. உள்ளத்தால் உள்ளலும் தீதே; பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பிறன் பொருளை அவன் அறியாத வகையால், 'வஞ்சித்துக் கொள்வோம்' என்று எண்ணாதிருக்க வேண்டும்.
It is a sin even to say in one's heart, I shall cheat my neighbour of his substance.



















