vinoth's படம்

எங்கோ ஒன்று!

எங்கோ ஒன்று!
==============

எதிர் புன்னகை
எதிர்பார்ப்பு இல்லாமல்
சிரித்தலில் தொடங்கிற்று
ஒன்று!

தரம் தவறு
நிறம் நிர்பந்தம்
குணம் குலம்
எடை போடாமல்
உள்ளதை உள்ளபடி
ஏற்றுக் கொண்டது
ஒன்று!

பால் ஈர்ப்பில்லை
நண்பர்களிடம்
பெருமை சொல்லாமல்
சந்தேக கண்களின்
பார்வை கெடுக்காமல்
வளர்கிறது
ஒன்று!

விடை பெற்ற கண்ணீர்
நிலவின் வரவேற்பு
கதிரவனுடன் போட்டி
ஊர்சுத்தல் ஸ்பரிச தேடல்
ஏதுமில்லாமல் கைகூடியது
ஒன்று!

நட்பு கெட்டுப்போய் விடவில்லை
எங்கோ எங்கெங்கோ
நாளும் வளர்ந்து வருகிறது
பகிரங்கப்படுத்தல் இல்லாத
ஒரு நட்பு!

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

velmurugan's படம்

nice


nice


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


vinoth's படம்

நன்றி


நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


Selvakumarnew's படம்

அருமை...


அருமை...


>>>Selvakumar<<<


vinoth's படம்

நன்றிங்க


நன்றிங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...