annaa's படம்

இறை வழிபாடு!

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்
....பதராம் எமையுங் காப்பானே!

திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

நன்றி!

" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
http://puthuvithai.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

uthira's படம்

திருமால் அல்லா


திருமால் அல்லா ஏசுவொடு
....திருப்பு கழ்பை பிள்குரானும்
அருகாய் வரட்டும் அனைவருமே
....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்

அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


vinoth's படம்

அன்பே சிவம்


அன்பே சிவம்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

கருத்து நன்றாக உள்ளது. மதத்தை


கருத்து நன்றாக உள்ளது. மதத்தை விட்டு மனம் கான்போம்.


சந்துரு


prasathtf's படம்

அழகான வரிகள்... அற்புதமான


அழகான வரிகள்... அற்புதமான கவிதை...

dharshi's படம்

....அன்பால் எல்லாம்


....அன்பால் எல்லாம் ஓர்கடவுள்
இரும்பால் ஆனது அல்லமனம்
....இருக்கும் அனைத்தும் நம்மதமாம்
உருவாக் கியவன் மனிதன்தான்
....உயர்வைப் பெறுதல் நம்மால்தான்!

அருமை..!! அருமை..!!
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்..!!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/