thamizthenee's படம்

addthis_pub = 'YOUR-ACCOUNT-ID';  அன்பு நண்பர்களே இன்று அனைத்திந்திய எழுத்தாள சங்கம் (அண்ணா நகர் பகுதி) பொதுச்செயலாளர் கவிஞர் திரு சுடர் முருகையா அவர்கள் எழுதிய ”ஒற்றை நக்‌ஷத்திரம்” என்னும் கவிதைப் நூல் வெளியீட்டு விழா 19/09/2010 ஞாயிறு காலை 9. 30 மணிக்கு கன்னிமரா நூலக அரங்கத்தில் நடைபெற்றது, திரு சுடர் முருகையா அவர்களின் அன்பான அழைப்புக்கு இணங்கி நானும் கலந்துகொண்டேன்,விழா இனிதே சிறப்புற அமைந்தது,

இதயகீதம் ராமானுஜம் அவர்கள் என்னுடன் டீ வீ எஸ் ஸில் பணியாற்றியவர், அவர் நிகழ்ச்சியை தன்னுடைய இனிய தமிழில் தொகுத்து வழங்கினார், வரவேற்புரை திரு அரிமா கே பீ பத்மனாபன் அவர்களால் வழங்கப்பட்டது, கவிமலரில் இடம் பெற்றிருக்கும் நூல்கள்,

“விழிகள்” திரு அரிமா என் இராசரத்தினம், ”விரல்கள்” திரு கவிஞர் கவிமதி, ”உள்ளம் திரு கவிஞர் கார்முகிலோன், ”உயிர் ” முனைவர் திரு மு இளங்கண்ணன் , திரு கலைமாமணி திரு விக்ரமன் அவர்கள் தலைமை தாங்க தோழர் திரு கலைக்கோட்டுதயம் தமிழன் தொலைக்காட்சி உரிமையாளர் அவர்கள் நூலை வெளியிட்டார், நூலைப் பெற்றுக்கொண்டவர் திரு இளம்பாரி உ. கருணாகரன் அவர்கள், அவை முன்னவர்,அ, இ.த எழுத்தாளர்கள் சங்கம், தொடர்ந்து நூலைப் பெற்றுக்கொண்டவர்கள், திரு கவிஞர் கார்மேகம், திரு அரிமா கே பீ பத்மனாபன், திரு அரிமா ராசரத்தினம், திரு அரிமா எல் ஸ்ரீகாந்த் ஆகியோர், வாழ்த்துரை வழங்கியவர்கள் தோழர் சீ மகேந்திரன், ஆசிரியர் தாமரை இதழ்,திரு பேராசிரியர் எஸ் கிருஷ்ணசாமி வரலாற்றுத் துறை,பச்சையப்பன் கல்லூரி, மாம்பலம் திரு சந்திர சேகர் , திரு எம் எஸ் மனோகரன் உரிமையாளர் எஸ் எம் சில்க்ஸ், ஏற்புரை திரு சுடர் முருகையா அவர்கள், நன்றியுரை திரு அரிமா எல் ஸ்ரீகாந்த் அவர்கள் விழா இனிதே நிறைவுற்றது,

நான் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் கன்னிமரா நூலகத்துக்கு சென்றுவிட்டேன், ஒவ்வொருவராக வரத்தொடங்கினர், சரி அந்த வளாகத்தை ஒரு முறை வலம் வரலாம், சரஸ்வதி இருக்கும் கோயிலாயிற்றே என்று வலம் வந்தேன், வலம் வரும் வேளையில் கைகள் துறுதுறுக்கவே கன்னிமரா நூலக வளாகத்தை ஒளிப்பதிவு செய்துகொண்டே நடந்தேன், அப்போது பழகிய குரல் ஒன்று கேட்டது, திரும்பிப் பார்த்தால் திரு காளைராஜன் அவர்கள், மகிழ்ந்தேன், திருப்பூவணம் செய்திகள் தொடர்பாக நூலகத்துக்கு வந்தேன், திரு தேவ் அவர்களும் இப்போது வருவார் என்றார்,

இருவரும் விடை பெற்று அவரவர் நோக்கில் நடக்கத் நான் புத்தக வெளியீட்டு விழா அரங்கத்தை நோக்கி நகர்ந்தேன், அங்கே பல பெரியவர்கள், அறிஞர்கள் வந்துகொண்டே இருந்தனர், மிகவும் பரிச்சியமான ஒரு முகம் தென்பட்டது, ஒரு வித ஸ்னேஹ பாவத்துடன் என்னை நோக்கி புன்னகை புரிந்தனர் அந்த தம்பதிகள், ஆம் எழுத்தாளர் பாலாதிரிபுர சுந்தரி அவர்களும் அவருடைய கணவரும் என்னை நோக்கி புன்ன்கை பூத்தனர்,நானும் அருகில் சென்று நலம் விசாரித்தேன், அப்படியே இருக்கும் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் அந்த அம்மையாரைப் பேட்டி எடுத்தேன்

திரு பா . பாலாதிரிபுர சுந்தரி அவர்கள் எம் .ஏ.பி லிட்.சாகித்யரத்னா, வைஷ்ணவா ஜூனியர் கல்லூரியில் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர், கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், இந்தி,தமிழ்,ஆங்கிலம்,ஸம்ஸ்கிருதம், போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்,

பல நூல்களை மொழி பெயர்த்திருக்கிறார், அந்தப் பேட்டியை தொகுத்து வெளியிடுகிறேன். பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போதே அனைத்திந்திய எழுத்தாளர் சங்க தலைவர் திரு விக்ரமன் அவர்கள் வருகை புரிந்தார், அவரை வரவேற்றேன் நலமா என்றார், நானும் அவரை நலம் விசாரித்தேன்,

மீண்டும் பேட்டியைத் தொடர்ந்தோம்,ஆயினும் பேட்டி அளிக்க அவரிடம் பல செய்திகள் உள்ளன, ஆங்கே நேரம் பற்றாமையால்,நான் அவர்களிடம் ஒரு நாள் அவரை அவர் வீட்டுக்கே சென்று பேட்டி எடுப்பதாக கூறினேன்,அவரும் தன்னுடைய அறிமுக அட்டையை வழங்கினார், மேலும் என் தாயாரின் கதைகளைப் படித்திருப்பதாகவும், வை மு கோதைநாயகி, டாக்டர் திரிபுர சுந்தரி என்னும் கதாசிரியர் லக்‌ஷ்மி அவர்களையும் என் தாயார் கமலம்மாள் அவர்களையும் பார்த்திருப்பதாகவும், கூறினார்,அவரைப் பார்க்கும் போது என் தாயாரைப் பார்ப்பது போல் ஒரு உணர்வு வந்தது எனக்கு,

திருமதி பாலா திரிபுரசுந்தரி அவர்களின் கணவர் திரு P .B பாலசுப்ரமணியன் அவர்கள், ஏஜீஎஸ் அலுவலகத்தில்ஆடிட் பகுதியில் ஆபீசராகப் பணியாற்றியவர்,ஒய்வு பெறும் முன்னர் நலத்துறை அதிகாரியாக பணிபுரிந்தவர், இவர் பல நாடகங்களை எழுதி இயக்கியவர், திரு கமலஹாசன் அவர்களுக்கு 12 வயது இருக்கும்போது அவரை சங்கரனாராக நடிக்கவைத்து இவர் பத்மபாதராகவும் நடித்து இயக்கி, திரு எம் ஜீ ஆர் அவர்களின் கைகளால் விருதுகள் பெற்றவர், இவர்கள் இருவரையும் ஒரு தனிப் பேட்டி எடுக்கலாம் என்று இருக்கிறேன்,

கன்னிமரா நூலகத்தின் உட்பகுதியயும் ஒளிப்பதிவு செய்திருக்கிறேன் புதியதாக கன்னிமரா நூலகத்துக்கு செல்வோருக்கு பயன்படும் என்று

அந்த கூடிய விரைவில் இணைக்கிறேன்

அன்புடன்

தமிழ்த்தேனீ

0
Your rating: None