rajudranjit's படம்

ஏனிந்தக் கொடுமையெனத் தனிமை
அது தனிய மடமையென எண்ணங்கள்
இனிமையான தருணங்கள் அசைபோட!

வளமையான வாழ்வது வெளிச்சம் காட்ட‌
எளிமையாக தொடக்கங்கள் சபையேற‌
புதுமையாக செய்திட செயல் கூடுமே

இடம் வலம் மாறி ஒரு சுற்று சுற்ற‌
அதுவொரு சுழற்சியாய் மாறிடவே
நலமென அறிவோம் அதனில் தீமை மாற!

அலைகின்ற பேரென மனிதர்களில் சிலர்
இருக்கின்ற சுகம் மறந்தே தேடுகின்றார்
உன்னிடம் இல்லாத ஒன்று எதுவென சொல்!

பொல்லாத பொருளில்லை நிலையாத வாழ்க்கையது
உதவிட மானுடம் வளர அது வாழ்க்கை அறிவாயோ
எல்லாம் உன்னைப்போலென எண்ணி புகழுடன் வாழ்!

கல்லுக்குள் தேரை அதுவொரு அதிசயம்
மனதிற்குள் ஏராளம் ஆசைகள் மனிதர்களுக்கு
சொல்வது இயல்பு செய்வது கடினம் முயற்சி செய்!

வேர் நீருரிஞ்ச தாவரம் வளர்ந்து செழுமையென‌
பூ பிஞ்சுக்காய் பழமென பலன் நோக்காமல் அளிக்க‌
உண்டு கொழுத்த உயிரே பலன் கருதுவது ஏனோ?

மனிதா மனிதா உலகின் உன்னதம் அறிந்து வாழ்
புனிதம் என்று மனிதனுக்குள் மனிதன் அடிமை ஏன்
இருகாலொருதலையே இதயமொன்றே வேற்றுமையேனோ

ஒற்றுமை கொள் வேற்றுமை அதிர கொல்
சான்றென நில் நிலையென உலகுள்ள வரை
மானிடம் போற்று மடமைகளை ஒழித்தே மனிதா வாழ்!

என்றும்: சுஷ்ருவா

5
Your rating: None Average: 5 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

தங்களின் கவிதைகள் ஒரு நூலாக


4

தங்களின் கவிதைகள் ஒரு நூலாக வெளியிட முயற்சி செய்யலாமே?
யோசிக்கவும்.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


rajudranjit's படம்

நன்றி நண்பரே! இதுவரை அப்படி


நன்றி நண்பரே! இதுவரை அப்படி ஒரு எண்ணம் இல்லை, தாங்கள் கூறியதின்படி யோசித்து முயற்சி செய்கின்றேன்,

Ponvannan's படம்

வேர் நீருரிஞ்ச தாவரம்


6

வேர் நீருரிஞ்ச தாவரம் வளர்ந்து செழுமையென‌
பூ பிஞ்சுக்காய் பழமென பலன் நோக்காமல் அளிக்க‌
உண்டு கொழுத்த உயிரே பலன் கருதுவது ஏனோ?

நல்ல வரிகள். இன்றைய காலத்தில் பலன் கருதாமல் நல்ல‌தைச் செய்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறதே.

rajudranjit's படம்

நன்றி ஐயா!


நன்றி ஐயா!