Skip to main content

வேண்டும் சுதந்திரம்!

URI: http://tamilnanbargal.com/node/42515
கருத்துகள்: 20Likes: 1449 viewsசிறப்பு பதிவு

வேண்டும் சுதந்திரம்!

DHANALAKSHMIKANNAN's படம்

ஹிம்சை வழியினை எதிர்த்து வென்று 

அஹிம்சை வழியினில் பெற்ற சுதந்திரம் 
அகிலம் காணாத அறவழி சுதந்திரம் 
அகன்றப் பாரத சுதந்திரம்!
 
ரத்தக் குழம்பு எண்ணெய் வார்த்து 
சுத்தக் கதர்த்திரி கருகி ஒளிர 
ஏத்தியத் தீபமே இந்திய சுதந்திரம் 
சித்தியத் தியாகத் தீபமே!
 
இரவில் வாங்கியதால் விடிவே இல்லைஎன்றக்
குரலில் பொங்கிய ஏக்கம் நிரந்தரமோ?
அரவின் வாயிலிலே அகப்பட்டத் தேரையே 
அறிவில் மாந்தர் சுதந்திரமே!
 
போராடியத் தலைமுறை காடேகி விட்டதால் 
பேயாடும் கொள்ளையர் வாழவோ சுதந்திரம்?
ஊரோடும் உறவோடும் இணைந்து ஏய்க்கும் 
நாரோடு மலர்மணம் போலவே!
 
அயலான் அடிமையினை நீக்கிட அண்ணல் 
செயலில் அகிம்சை! சொந்த இந்தியனின் 
செயலின் தளையினை நீக்கிட எண்ணல்
செயல் செய்திடல் நன்றே!
 
சனநாயக அளவில் பெரியதொரு மாற்றமே 
குணமாக்கும் சுதந்திர சுந்தரத் தீபத்தை!
பணநாயக கொள்ளையில் அள்ளி மூழ்குபவரை 
பிணையாக்கி அணைபோட்டு பிணமாக்குவீரே!  
 
பாரதப் புதல்வர்களே! முளையிடும் மீசைகளே!
பாரதியின் புதுமைப் பெண்களே! விளைநிலமிதில் 
வீரத்தின் விவேகத்தின் வேகத்தைக் கொண்டே 
உதிரத்தில் உடலில் உறுதிகொள்ளே!
 
         
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

இரவில் வாங்கியதால் விடிவே இல்லைஎன்றக்
குரலில் பொங்கிய ஏக்கம் நிரந்தரமோ?
அரவின் வாயிலிலே அகப்பட்டத் தேரையே 
அறிவில் மாந்தர் சுதந்திரமே!

இன்றைய காலகட்டத்தில் கஷ்டப்பட்டு வாங்கிய
சுதந்திரம் பணம்படைத்தவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும்
தான் சாதகமாக இருக்கிறது....ஏழைகள், கைவிடப்பட்டவர்கள்
பாமர மக்கள் சுதந்திரம் இன்றி தவிக்கிறார்கள்....

பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையை போல
பெற்ற சுதந்திரத்தை ஆணவக்காரர்களின்
கைகளில் கொடுத்துவிட்டு பறிதவித்து நிற்கிறோம்!!!!

இந்த நிலை என்று மாறுமோ????

        :cry:    
 

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி

அயலான் அடிமையினை நீக்கிட அண்ணல் 
செயலில் அகிம்சை! சொந்த இந்தியனின் 
செயலின் தளையினை நீக்கிட எண்ணல்
செயல் செய்திடல் நன்றே!

இது தான் சத்தியம்! சுதந்திரம் சுதந்திரம் என்று சொல்லித் திரிகிறோமே இதுவோ சுதந்திரம்?

அன்றும் நம் கையில் விலங்கு...
இன்றும் நம் கையில் விலங்கு!
அன்று அயலான் பூட்டிய விலங்கு! 
இன்று சுத்தமான சுதேச நாட்டில் தயாரிக்கப்பட்ட  விலங்கு!
இது தான் வித்தியாசம்!
என்று நம்முள் புதரிட்டுக் கிடக்கும், ஜாதி வெறி, மத வெறி, ஒற்றுமையின்மை, உட்பூசல், அரசியல் சாக்கடை ஆகியவற்றிலிருந்து வெளிவருகிறோமோ....
அன்று தான் உண்மையில் சுதந்திரப் பொன்னாள்! அது வரையில் இந்நாளை தேசத்திற்கு உயிரீந்த த்யாகியரின் நினைவு நாளாய் கொண்டாடி அவர்களை சிறப்பித்தல் தகும்!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

vijijo's படம்

வெள்ளையனிடம் போராடி

பெற்ற‌ சுதந்திரம்

இன்று

கொள்ளையர்கள் கையில்.....

என்ன‌ செய்வது....

மனதை தேற்றிக்கொண்டு

சுதந்திர‌ தின‌ வாழ்த்துக்களாவது

சொல்லிக்கொள்வோம்....

raj_tamil82's படம்

" width="44" />( :-((" width="50" />

தமிழே! தமிழ் தந்த சுவைவே வாழ்க!!

இலக்கை அறியா அம்பின் பயன் என்?
இலக்கை அறியா அம்பின் பயன் என்? 

 யார் அம்பு? யார் வில்? எய்துபவர் யார்?
கலக்கமேன்? கலங்கினால் குழப்பமே மிகும்?
நிலைத்த கொள்கைக் காட்டுவதே நோக்கம்! 

சிவதவசி

vinoth's படம்
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

Tamil's படம்



என் இந்தியா என் தாய்வீடு!

வீட்டில் ஆயிரம் குறைகள் இருக்கலாம்

குறை சொல்வது நம் வேலை அல்ல...

திருத்த களம் இறங்குவதே நம் கடமை!

இனிய இந்திய சுதந்திர தின நல் வாழ்த்துகள் - http://tamilnanbargal.com/

தமிழ் நண்பர்கள் சார்பில்...
tamilnanbargal.com

இந்திய மண்ணை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தியச் சுதந்திர தின வாழ்த்துகள்.

" பாரதப் புதல்வர்களே! முளையிடும் மீசைகளே!

பாரதியின் புதுமைப் பெண்களே! விளைநிலமிதில் 
வீரத்தின் விவேகத்தின் வேகத்தைக் கொண்டே 
உதிரத்தில் உடலில் உறுதிகொள்ளே! "
வரிகள் எல்லோர் மனதிலும் நிலைக்கட்டும்..!!
      

veerakrish's படம்

Aaha enna oru veerathin vetkai
Arumai ayya arumai....

இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன்
உரியவனைதேடி......... வீரா