கண்டோம்நாம் தமிழ்குலத்தில் மறவர்தமை
. . . . களத்தினிலே வீழ்ந்தவர்கள் விதைகளானார்
உண்டோம்நாம் உணர்வோடு தன்மானந்தன்னை
. . . . உதிரத்தில் கலந்ததனால் உறுதிகொண்டோம்
அண்டம்நாம் அகிலத்திலினி யாரையுமே
. . . . அஞ்சுதல்லெனு மிழிநிலையிங்கு கொன்றோம்
வேண்டோம்நாம் வெந்தபுண்ணில் வேல்பாய்தற்கு
. . . . வேடிக்கை யாயுமினி வீழமாட்டோம்..!!
—
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/
கருத்துகள்
நல்லதே நடக்க என் பங்குக்கு
நல்லதே நடக்க என் பங்குக்கு நானும் பிரார்த்திக்கிறேன் டர்ஷி.
நீஙகள் இப்படி வீறுகொண்டு
நீஙகள் இப்படி வீறுகொண்டு எழும் அளவிற்கு ஏதாவது அங்கு நல்லது நடந்ததா? அறிய ஆவல்.
சந்துரு
(@ CHANDRU) நாங்கள்
(@ CHANDRU) நாங்கள் வீறுகொண்டு எழ நாட்கள் இல்லை,
நல்ல நேரம் தேவையில்லை ,
(@ DHARSI) இப்போது கூட நாங்கள் வீழ்ந்து விடவில்லை.
மேற்கே மறைந்திருக்கு சூரியன் தான் எங்கள் நிலை.
எப்போதும் இல்லாத நெருப்பு தணல்களோடு
மீண்டும் கிழக்கே வேங்கைகள் எழும் நேரமும் தூரமில்லை..... ---எப்போதும் எங்கேயும் தமிழன் வினோ
????????? ???????? ????
இன்னைக்கு பிரதமர் எலக்சன்
இன்னைக்கு பிரதமர் எலக்சன் நடக்குது. நாளை திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
சந்துரு
அருமையான
அருமையான கவிதை................
நமக்கு வீழ்ச்சி ஒன்றும் புதிதல்ல
வீழ்ந்தே கிடப்பவர்ககும் நாமல்ல
எழுவோம்......... வீறு கொண்டெழுவோம்................
நிச்சயம் மலரும் நம் கனவு...........
நண்பர் சந்துரு கூறியது "இன்னைக்கு பிரதமர் எலக்சன் நடக்குது. நாளை திருப்பங்களை எதிர்பார்க்கலாம்." என்னவென்று எனக்குப் புரியவில்லை.................
பல எதிர் கட்சிகள், ஜாதிக் கட்சிகள் உள்ள தமிழகத்திலேயே நடக்கும் இடைத் தேர்தல்களில் " ஆளுங் கட்சியை" தோற்கடிக்க முடியாது........... அங்கு வலுவுள்ள எதிர் கட்சிகளும் இல்லை, எதிர் கட்சிகளை ஆதரிப்பவர்களும் இல்லை,...... பிறகு எப்படி திருப்பங்கள் சாதகமாக இருக்குமென்று எதிர்ப்பார்ப்பது?
உணர்வு மிக்க கவிதை, உங்களை
உணர்வு மிக்க கவிதை, உங்களை எல்லாம் கண்களில் கண்ணீரோடு பொங்கும் பாசத்தோடு இதயத்தில் வைத்துள்ளோம்












