amazysara's படம்

வெளியே நிறைய பைத்தியக்காரர்கள்

இரக்கமில்லாமல் இறுக்கவேண்டும்..
போதும் என்னையும் தூக்கிலிடுக
தூக்குக் கயிறு..!!
**************************************
இது எத்தனை..?
இரண்டு..
உம்ம்ம்..உன் பெயர் என்ன.?
உதயன்...
நீ...குணமாகிவிட்டாய்..
போகலாம்..!
போனவன் திரும்பி வந்தான்..
"டாக்டர்...நான் இங்கேயே இருக்கிறேன்..
வெளியே நிறைய பைத்தியக்காரர்கள்..!!"
**************************************
மயங்கி போகிறார்கள்
புனை பெயரில்...
கவிதையென அச்சிடுகிறார்கள்..
வார்த்தை வாமிட்டுகளை...
பெண் எழுத்து என்றால்
புரட்டி பார்க்கிறார்கள்...
வார்த்தை ஜாலம் காட்டணும்...
என்னவென்று புரியவே
இரண்டு முறை படிக்கணும்...?!
முடியாது..என் கவிதை
'பென்சில் பிடிக்கும்' என்
'மகனுக்கும் புரியணும்..!!'
அது போதும் பெருமை எனக்கு..!!

-கோவை சதீஷ்

4.66667
Your rating: None Average: 4.7 (3 votes)

கருத்துகள்

Ragavan's படம்

(No subject)


5

bye


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


smariappan's படம்

நன்றாக உள்ளது....


5

நன்றாக உள்ளது....
Clap Clap Clap


mari