rajudranjit's படம்

சிந்தனையை சிறப்பானச் செயலாக்கி
தான் கற்ற வித்தையை திறம்பட‌
அடுத்தவர் மயங்க சிலையென வடித்த‌
சிற்பிக்கே அதன் கஷ்டமறியும்

இர‌சிகரென்போர் கலையில் மயங்கி
கடனுக்கேனும் பொருளீட்டி கொண்டுவருவார்
தனுக்கு பிடித்த பொருளது பெறவே
சிற்பியின் திறமைக்கு முன் ஒன்றுமில்லை

வாயில்லா ஜீவனது அதன் சொல் யாரறிவார்
மனித விலங்கிற்கு அடிமைப்பட்ட ஓர்விலங்கு
மக்களுக்கு த‌ன்னுதிரம் தனைத் தாயென தருகின்றது
பொதுநலம் முரண்பாடு செய்வதில்லை புகழுக்குறியது பசு

தன் வயிறு வளர்க்க பசு வயிறு நிறைத்து
சுயநலம் கொண்டு சுதந்திரம் பறித்தான்
அதன் பிள்ளை வயிற்றுக்குள்ளதை விற்று
பொருளால் இலாபமடைந்தான் பசுவின் பொதுநலம் உண்மையிலாபம்

ஊரார் வணங்க ஓர்கோயிலெழும் அங்கே
மக்களின் உதவியால் கருவறை புகும் கடவுள்
பொருள் கொடுத்தவன் வணங்கி நிற்க‌
இரவில் உறங்கி காலையில் விழிப்பார் கடவுள்

கட்டியவன் இச்சைப் போக்கியக் குற்றம்
தன்னுயிரினுள் ஓருயிர் வளர்க்கும் தாய்
உறக்கத்திலும் விழித்திருப்பாள் உணவதை வெறுத்து
தான் பெற்ற கஷ்டம் மறந்து பரிசெனப் பிறந்த சிசு

பொருளது கொண்டவன் கவனம் முழுதும்
எமக்குப் பின் அடுதவர் கொள்வாரிதை
என்பதை மறந்து எல்லாம் வரும் நம்பின்னென‌
நாளும் அதைப்பாதுகாத்து தன்னுயிர் நொந்துபோவான்

அருள‌து கொண்டவன் அறிந்தவன் நாலும்
நாளைய உண்மை எதுவென அறிபவன்
ஒருமுழத்துணியும் உண்ண உணவும்
போதுமென வாழ்க்கை நினைந்து எதிலும் துனிந்தவன்

வளரும் சமூகம் வளமுடன் வாழ‌
நல்லவை தீயவை தீர்வெதுவென‌
உள்ளதை வைத்து உளம் மகிழ‌
கற்றுக் கொடுத்தது ஆசிரியப் பெருந்தகையே

இருக்கின்ற பழக்கம் மாறாதிருக்க‌
தன்னில் உண்டு தலையது அடிமை
பெருமைக்கு வாழ்ந்து புலாங்கிதம் கொள்ளும்
மறுமை சொல்லி உள்ளம் கெடுக்கும் ஆச்சாரியன்

சுயநலமெனினும் அதிலொரு பொதுநலம் முதலாளி
தொழிலாளி ஆயிரமிருந்தாலும் முதலாளி ஒருவனே
தானொருவன் வாழ ஆயிரம் தொழிலாளிக்கு வாழ்வு
தன்ந‌லத்திலும் பொதுநலம்நோக்கும் முதலாளிக்கே பணம்

தன்னை நம்பியவர் நலமுடனிருக்க‌
உண்மை தொண்டில் உறுதியாய் உழைக்க‌
உடலும் உள்ளமும் நலமுடன் வேண்டும்
உழைத்தால் போதும் நாலுக்காசு தொழிலாளிக்கு

நோயது பெற்றவன் நாடுவது நல்மருத்துவரை
நோயிற்கு தகுந்த தீர்வைக் கற்றவனே
அறிந்தவன் தொழிலில் சிறந்தவனென்றறிந்தாலே
மருத்துவர் பிழைப்பார் முக்கியத்துவம் கொடுப்பார்

உள்ளம் கெட்டு உடலும் கெட்டு ஓடுவார்
பொருளுக்கு தகுந்த உன்னதம் கேட்டு
தான் பிழைக்க நாடுவார் வைத்தியரை
நாளை பார்த்துக் கொள்வோமென்றால் பிழைப்பதெப்படி நோயாளி

( என் நண்பர் யாழ்பாவாணர் செலுத்தும் அம்பானேன் நான், தவறானக் கருத்தாயின் பொருத்தருள்க என் தமிழ் நண்பர்கள் தளமே)

என்றும்: சுஷ்ருவா

9
Your rating: None Average: 9 (1 vote)

கருத்துகள்

tamilparks's படம்

பாராட்டுக்கள்


9

பாராட்டுக்கள் Clap Clap


தமிழ்த்தோட்டம் http://tamilparks.50webs.com
தமிழ்த்தோட்டம் கருத்துக்களம் www.tamilthottm.in


rajudranjit's படம்

நன்றி நண்பரே!


நன்றி நண்பரே!