rajudranjit's படம்

கஷ்டமில்லா மனிதர் யாருலகில்
இலாபம் தேடா உயிரேதுலகில்
விவரமில்லா வீணருண்டே உலகில்
வியாக்கியானம் பேசி வம்பளப்பார்

நல்லதொருக் கவிதை உம்மிடம் பார்த்தேன்
காதலியவள் காதலனுக்காகக் காத்திருப்பதுபோல‌
தாயைத் தேடும் பிள்ளையைப்போலே
யாழ்பாவாணரே நம் தமிழ் நண்பர் தளத்திலே

நல்லதொரு ஆசிரியனாய் எமக்கு நீரிருக்க‌
ஆசிரியனைக் கண்டோடும் மாணாக்கனாகி
மரமும் செடியும் மலையுமில்லா பாலைவனத்திலே
எங்கோடி நான் தப்புவேன் எனதருமை பாவாணாரே

கேள்வியுதித்த விடத்திலே பதிலை கேட்பது தவறில்லை
தலைகனம் கொண்டவர்களுக்கு நான் உவமை
நல்லதொரு நண்பரே நீவீர் வாழ்கவெனக் கூறி
நண்பர்கள் அருமையான பதிலை தந்த போதிலும்

எனது பதில் தவறாகயிருப்பினும் பொருத்தருள்வீர்
பொற்ப்பேழைக் காக்கும் பூதம் நீர் கோபம் வேண்டாம்
வாதத்தில் உம்முடன் மோத நான் தயாரில்லை
உண்மையெதுவானாலும் எனக்கறிந்த பதிலிதுவே கேளும்

என்றும்: சுஷ்ருவா

0
Your rating: None