Ponvannan's படம்

விருப்பு இல்லை வெறுப்பு இல்லை வேதனையும் இல்லை
சிரிப்பு இல்லை அழுகை இல்லை சிறுமதியும் இல்லை
பிறப்பு இல்லை இறப்பு இல்லை பூவுலகமே இல்லை
உறவு இல்லை பிரிவு இல்லை சோதனைகள் இல்லை

இரவும் இல்லை பகலும் இல்லை இருவினையும் இல்லை
இனிப்பும் இல்லை கசப்பும் இல்லை ஒருசுவையும் இல்லை
கதியுமில்லை விதியும் இல்லை மதிவழியே எல்லை
வரவுமில்லை செலவுமில்லை வரையறையே இல்லை

நாதியில்லை நானும் இல்லை ஆரவாரம் இல்லை
நாதம் இல்லை கீதமில்லை நான்மறையே எல்லை
சாதியில்லை சமயம் இல்லை சாதிப்பதொன் றில்லை
தீதும் இல்லை நன்றும் இல்லை நடுநிலையே எல்லை

இல்லை இல்லை என்றிருந்தால் இல்லாது ஆகும் தொல்லை
இல்லாததும் இருப்பாகும் உணர்ந்து கொண்டா லவளை
இல்லாமலும் இருப்பாள் ஒன்றும் சொல்லாமலும் இருப்பாள்
இல்லாததை இயல்பாக்கி அன்னை எக்காலமும் இருப்பாள்

இன்பம் இல்லை துன்பம் இல்லை மறவேனுனது புகழை
இருக்கும் வரை வாழ்த்திடுவேன் என்றுமுந்தன் செயலை
இருப்பவர்க்கும் இல்லாதோர்க்கும் தருவாயுனது கழலை
இறுதிவரை துணையே நீதான் எனக்கு என்னடி கவலை

என்றும்: பொன்வண்ணன்

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

இல்லை இல்லை இல்லை இல்லாததை


8

இல்லை
இல்லை
இல்லை
இல்லாததை இயல்பாக்கும் அன்னை
இறுதிவரை
அவளே துணையே என்றழைப்பது
பக்தியை வெளிப்படுத்துகிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


Ponvannan's படம்

நன்றி நண்பரே.


நன்றி நண்பரே.

saravanamuthu's படம்

இல்லை இல்லை என்றிருந்தால்


6

இல்லை இல்லை என்றிருந்தால் இல்லாது ஆகும் தொல்லை
Clap Clap Clap

Ponvannan's படம்

நன்றி நண்பரே


நன்றி நண்பரே