உச்சிமலை பிள்ளையாரே
உசரந்தான் உசரந்தான் நீயிருக்குமிடம்
தலைக்குமேலே கையெடுத்து கும்பிடுறேன்
தலைவனே காத்திடும் எம்மை!
முக்குறுனிப் பிள்ளையாரே
கருனை தான் கருனை தான்
அன்டிவந்தோரை அரவனைத்து காத்திடுவாய்
கழனியெல்லாம் சீர்பெறவே எம்மை!
சித்திவிநாயகப் பிள்ளையாரே
சித்தி தான் சித்தி தான்
புத்திய தெளிய வைச்சு சீராக்கிடுவாய்
சென்றவிடமெல்லாம் சிறப்புர விளங்கிடவே!
ஆனைமுக பிள்ளையாரே
அறிவிலே அற்புதரே,ஆண்டவரே
அன்னைக்கு பிள்ளையாக அய்யனே
தந்தைக்கு தனயனாக தாங்கிடும் உலகத்தில்!
சிந்தையிலே அமர்ந்து நீர்
செகமதை ஆண்டிடும் வாத்தியாரே
உன்னையல்லாமல் உலகத்தில் நீதியுண்டா
அன்னைதந்தை உலகென புத்திலுரைத்தாயே!
கந்தனென்ற தம்பிக்கு கனிவுடனே
கனிகொடுத்த அண்ணனென்ற ஆண்டகையே
துணயதில்லா நம்பிக்கை தும்பிக்கையோனே
துதித்துன்னை கும்பிடுகிறோம் துணைபுரிவாய்!
காலமது ஏதென்றறியோம் கற்பகமே
கனிவான உன்பார்வை கண்டாலே
வாழ்விற்கு மூலமே ஆதிவிநாயகா
ஆதரித்து வாழ்த்துமே ஆதாரம் நீயே!
கருத்துகள்
பக்தியோடு படிக்க முடிந்தது
பக்தியோடு படிக்க முடிந்தது

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil










