Skip to main content

விதியே எழுந்திடு!

URI: http://tamilnanbargal.com/node/42869
கருத்துகள்: 5Likes: 0255 views

விதியே எழுந்திடு!

DHANALAKSHMIKANNAN's படம்

எண்ணத் தேனீக்கள் சேர்க்கும் அடைமனத்தில்

உண்ணும் தேன் நன்றோ! 
 
கண்ணும் காதும் நேரடித் தொடர்பில் 
விண்ட  மூளை நன்றோ? 
 
கையும் காலும் செய்யும் செயலில் 
ஐயம் கொள்ளுதல் நன்றோ?
 
உடலும் மனமும் இணைந்த வாழ்வில் 
தடையம் உடைதல் நன்றோ?
 
வாழும் நாளில் கழிந்தது போக[கழிந்தது போக-உண்ணல்,உறங்கல் போன்ற சுயத் தேவை நேரங்கள் கழித்து] 
வாழ்நாள் தாழ்தல் நன்றோ? 
 
ஆண்டுகள் நூறு வாழ்தல் எனில் 
ஆண்டது நாறுதல் நன்றோ? [ஆண்டது-செயல்படும் காலங்கள்] [நாறுதல்-கெட்ட நாற்றம்]
 
நன்மை தீமையும் உணரும் தன்மையில்  
நன்மை நழுவுதல்  நன்றோ?
 
பிறப்பில் நிறை வளர்வில் நிறை 
இறப்பில் குறை நன்றோ?
 
உண்டது கண்டது அண்டியது  கொண்டது 
விண்டது தண்டம் நன்றோ?
 
பிறப்பது பலர்! விதைப்பது சிலரே!
பிறப்பிதை சிதைப்பது நன்றோ?
 
பலர்போலப் பிறந்து இறப்பவன் அல்லன்     
சிலர்போல  விதைத்தவன் நன்றே!
 
விதித்தவன் நீ! விதைத்தவன் நீ!
விதிப்பயன் நீ! விதியே எழுந்திடு![எழுதிடு]
 
 
  
 
 
  
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

அருமை

விதித்தவன் நீ விதைத்தவன் நீ

என்றால் அனைத்தும் நாமாக ஆகிவிடாதா

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...