“என்று தனியும் எங்கள் சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்”
என்று தனியும் இந்த பாரதியின் ஏக்கம்
என்று விளையும் எங்கள் எழுச்சியின் தாக்கம்
விடியலை வேண்டி விடுதலை பெற்றோம்
மடமையின் இருளினால் அடிமையும் பட்டோம்
உரிமைகள் வேண்டி உயிர்ப் பலியிட்டோம்
உரிமைகள் பேசி பிரிவினில் நின்றோம்
உடமைகள் காக்க உயிர் வலி பெற்றோம்
வளமைகள் பலதை அடகு தான் வைத்தோம்
அறிவினில் ஆயிரம் தலைமுறை பெற்றோம்
அயலவர் பெருமையில் அனைத்தையும் விட்டோம்
மொழியினில் முழுமையாய் செழுமையும் பெற்றோம்
இழிவதாய் எண்ணி தாய் மொழி விட்டோம்
அறநெறி கண்டு அமைதியைக் கொண்டோம்
புதுமையின் பெயரில் அனைத்தையும் கொன்றோம்
உலகினிக்கின்று உதாரணம் தந்தோம்
இறைவழி நின்று ஆண்மீகமென்றோம்
மூடத்தனத்தால் நம்பிக்கை வளர்த்தோம்
முன்னோர் அளித்த அருமைகள் குலைத்தோம்
குடும்பங்கள் என்ற எழில் வழி கொன்றோம்
தலைமுறை அனைத்தும் இழிபட வைத்தோம்
வழி வழி வந்த கடமைகள் விட்டோம்
ஒற்றுமை அழிக்கும் உறவுகள் பெற்றோம்
பெருமைகள் பேசி வளர்ச்சியை சுட்டோம்
திறமைகள் போக மதி ஒளி கெட்டோம்
தரித்திர நாமத்தை நெற்றியில் பெற்றோம்
சரித்திரச் சலவைகள் புழுதியில் இட்டோம்
விடியலை மறந்து இருளினில் இருக்கும்
சுயநலச் சகதியில் சுதந்திரம் நட்டோம்
விடுதலை தாகம் தீரவில்லை
விடியலும் இன்னும் புலரவில்லை
ஏழ்மை இன்னும் அழியவில்லை
சூதும் வாதும் ஒழியவில்லை
நேர்மை இன்னும் மிளிரவில்லை
வாய்மை வளர வழியுமில்லை
தீமை தாங்க முடியவில்லை
வாழ்க்கை வாழத் துனிவே எல்லை
விடுதலை தந்த விடியலோ கொள்ளை
வெகு சிலர் வாழ சுதந்திரப் பிச்சை
கெடுதலில் அன்பை குழைத்தே தொல்லை
காட்டியே கொடுத்து பிழைப்பதன் நன்மை
பதவிகள் வசதிகள் அடைவதே எல்லை
சுதந்திரச் சுமைகளை இழக்கவுமில்லை
நிரந்தர வழிகளை தொகுக்கவுமில்லை
உயர்ந்திட உண்மைகள் உயிர்க்க வில்லை
உண்மைகள் வைத்து நன்மைகள் செய்து
தின்மைகள் கொண்டு வன்மைகள் வென்று
பெண்மைகள் போற்றி இன்மைகள் தூற்றி
அன்புடன் வேண்டும் விடுதலை வேள்வி
வந்தேமாதரம்...
கண்ணீருடன்...?!!
பெற்ற விடுதலையை
விற்றுக் கொண்டிருக்கின்றோம்
வேறு வழிகளில்...........................?????????????????????





