Selvakumarnew's படம்

(LANKASRI POEMS)நச்சுக்குண்டுகள் எம் பிஞ்சுகளை
கொன்று குவித்தபொழுது
கண்விழித்து உறங்கிக்கொண்டிருந்த
மாபெரும் உலகத்தலைவர்களுக்கு
ஓராண்டின் நினைவாக குருதியில்
தோய்ந்த உணர்வினில் இருந்து சில வரிகள்"

பொஷ்பர நச்சுக்கொத்துக்குண்டுகளை
அடுக்கடுக்கா சுமந்து சென்ற ஆகாய விமானத்தின்
அணிவகுப்பினை பார்வையிட்ட பாகிமூனுக்கு
ஆங்காங்கே சிதறிக்கிடந்த எம் ஈழத்தின்
பச்சிழம் மழலைகளின் உடலங்கள் அவர்
கண்ணில்படாமல் மறைந்துவிட்டதோ என்னவோ"

சிலநொடியேனும் சிந்தித்திருப்பினில் பல எம்
உறவுகளின் அவலங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்
சிங்களன் சீனாவின் காலில் விழுந்த போதெல்லாம்
பாகிமூனின் உதடுகள் மெளனமாகியதேனோ
விழித்தெழுங்கள் உலகத்தலைவர்களே ஒரு முறையேனும்
விடியலுக்கா ஏங்கும் எம் ஈழத்தமிழினத்தின் சோகக்குரல் கேட்டு"

அடுக்குவரியில் எழுதிமுடிக்க இதுவொன்றும் கவியல்ல
ஆண்டாண்டாய் ஆண்ட எம் ஈழத்தமிழினம் அழிக்கப்பட்டு
விதைக்கப்பட்ட மன்னிலிருந்து எழுதும் கண்னீர்சுமந்த
ரணத்தின் வடுக்கலில்லிருந்து வரும் வரிகள் இது"

இந்தியாவும், ஈராணும், இஷ்ரேலும்,பாக்கிஸ்த்தானும்
எத்தனைதான் நாடடா எம்மீது படையெடுக்க
அள்ளி அள்ளி வழங்கியது ஆயுதங்கள் மட்டுமல்ல
ஆகாய விமானியாம் இஷ்ரேல் நாட்டவனோ
ராடர் உதவியாம் இந்திய நாட்டவனோ
தரைப்படை வியூகமாம் பாக்கிஸ்த்தானியும்
நச்சுக்கொத்துக்குண்டுகளை தூவிச்சென்றான் ஈரான் நாட்டவனும்"

என்னென்ன கோபங்களோ எம் ஈழத்தமிழர்மீது
நாங்கள் செய்த பாவங்கள் தான் என்னென்னவோ
சுதந்திர காற்றுதனை சுவாசிக்க எண்ணியது பாவமா...?
எம்குலத்துப்பெண்களின் கற்பதனைக்காக்க எண்ணியதுபாவமா...?
இல்லையேல் கையளவு மண்கூட களவுபோகக்கூடாது என்றெண்ணி
ஈழக்கழமதிலே போராடியது குற்றமா...?

விழித்தெழுங்கள் மனிதனேயமிக்க மாபெரும் உலகத்தலைவர்களே
இனியும்வேண்டாம் முழித்துக்கொண்டே உறங்கும்
பொய்முகம் கொண்ட உறக்கம் உங்களிடத்தில்
வேதனையும் சோதனையும் எம்முடன் போகட்டும்"

போதுமடா போதுமடா மனிதா பொல்லாத உலகமிது மனிதா
வாழ்வதுவோ சாவதுவோ மனிதா அது
நம் தமிழீழத்திலே நடக்கட்டுமடா மனிதா>>>ஒற்றன்<<<

7
Your rating: None Average: 7 (2 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

இன உணர்வு போற்றுதலுக்கு


4

இன உணர்வு போற்றுதலுக்கு உரியது! நாட்டுப் பற்று பாராட்டுக்குறியது! கோபத்தில் அவசரப்பட்டால் தமிழுக்கு இழுக்கு! உமது கவிதையில் உள்ள எழுத்து பிழையை நன்றாக படித்து மாற்றி அமைக்கவும்!
உமது கவிதை உண்மை விளம்பி! கவிதை பாராட்டுக்குறியது!