vanithaselvam1212's படம்

வாழ்ந்திடலாம் வாழ்ந்திடலாம்
நண்பா வாழ்ந்திடலாம்
பூமியிலே பல பாதையுண்டு
நாமும் வாழ்ந்திடலாம்

உன் பார்வை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பாதையுண்டு
உன் இரவை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் பகலுமுண்டு
நீ மழையை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெயிலுமுண்டு
நீ துயரை கடந்து வந்து பார்த்தால்
அங்கும் வெற்றியுண்டு

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

தொலைந்து போன வாழ்வை
நினைத்து பயணம் செய்தாலே
மழைத்துளிகள் கூட
மிரட்சியாகும் - மிரண்டு விடாதே

தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும் - வருத்தப்படாதே

தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு

வானம் போல உள்ளம் வைத்தால்
மேகம் போல தோல்வி எல்லாம்
காற்றடித்தால்
கலைந்தே போகும்

மூன்றாம் "கை"யை நீயும்
இழந்தால்
உன் நம்பிக்"கை"யை நீயும்
இழந்தால்
உண்மையான தோல்வி
அது தான்
தெரிந்து கொள் நண்பா நண்பா

நம்பிக்கை அது வேண்டுமடா
நம்பினால் வாழ்க்கை உண்டுமடா

(வாழ்ந்திடலாம் ....) Sad Tongue

0
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

தன்னம்பிகக்கையூட்டும்


தன்னம்பிகக்கையூட்டும் கவிதை
நன்றி


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

தொலைவில் தெரியும் வாழ்வை தேடி


தொலைவில் தெரியும் வாழ்வை
தேடி பயணம் செய்தாலே
வானம் கூட
வாசலாகும்....

அருமை


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


saravanamuthu's படம்

வாழ்க்கை வாழ்வதற்கே


வாழ்க்கை வாழ்வதற்கே

annaa's படம்

நல்ல கவிதை..!! வருக‌..!!


நல்ல கவிதை..!!
வருக‌..!!


annaa


vanithaselvam1212's படம்

ungal நட்பு எனக்கு கிைடக்க


ungal நட்பு எனக்கு கிைடக்க ேவண்டும்,,,,,


அனிதா,BGDCA


joshi2010's படம்

மிகக அருமையான வரிகள்


மிகக அருமையான வரிகள் சூப்பபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
"தோல்வியில்லா மனிதனை
காட்டு
காயமில்லா மனிதனை
காட்டு
வெற்றி மட்டும் வாழ்க்கை
என்றால்
ஜனனம் என்ன அர்த்தம்
சொல்லு""

சூப்பர்......


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com