"வாருங்கள் அன்பு செய்வோம்"
தோட்டத்திலே
தொலைந்த தூரத்திலே
தோண்டி இட்ட மடுவினிலே;
நட்ட நல்ல மரமது
நல்லாக்காய் காச்சிருக்க;
கிளைகளெலாம் ஆங்கே;
ஆகாயத்தை அழகாக்கும்
குருவிகளும், குஞ்சுகளும்
கூடியிருக்கும் கூடு கட்டி
கூட்டமாய் கூடியங்கே
கிளையதனில் கிளியும் சேர்ந்து.
நானும் கூட அமர்ந்திருக்கன்
மெல்ல நல்ல வெயிலினிலே
நிழல் தேடி அலைகிலே.
மாமரத்தடி தேடி, ஓடி.
காச்சோன்ச மரமுமல்ல ~ அது
மண்ணில் மனிதன் தின்ன
காய், கனி சொரியும்
மா மரமது
மாமரத்து அருகினிலே
ஆறேழு நாளாக
அரும்பு விட்ட சிறுகொடி;
ஆசையாய் அந்த மரம் தொட்டு
அரும்பு விட்ட சிறுகொடி;
விருப்புடன் விருட்சம் சுற்றி
விரிந்து, நுளைந்து பற்றியதில்
பத்துமாதம் பக்கமாய் நிக்கயிலே
பரந்து பற்றை ஆகிடிச்சி
பச்சை இலை நாலிருந்த
பசுமையான பச்சைக்கொடி.
புல்லு வெட்ட வந்த பயல்
காச்ச காய் ஒளிஞ்சிருக்க ~ கவலைலே
வீச்சு வாளெடுத்து
வீணாக்கொடியொன்னு;
விருட்சம் தொட்டு,
விண்ணொளி மறச்சு,
வீராப்பாய் படருதுன்னு ~ நஞ்சு
விழுங்கிய பேச்சோடு
விசமானான் கொடிக்கு.
வீச்சுவாள் வலிமை தந்த
கொடுமை கொடிக்கே!
வெட்டிய கொடியுமது வேரிழந்து,
வேர்தொட்ட நீரிழந்து;
வெட்டாறு வெயிலினிலே
வெகுவாக வெதும்பிரிச்சி, 
வெதும்பி நாலு நாளாகுமுன்னே
மாண்டிருச்சி மாமரமும்
தன்னுயிரை மாச்சிக்கொண்டே.
மாமரத்து வேரோரம்
வற்றாத நீரிருக்க
வயலும் கூட செளிச்சிருக்க
தனிச்சிருந்த மாமரமும்
தன்னுயிர் துறந்த மாயமென்ன?
தன்கூட நின்ன ஒன்னு
தனியாக இறந்திருச்சே
பாதாள வேரும் இணஞ்சே
என்கூட எழுந்த கொடி,
என் மேலே படர்ந்த கொடி
பட்டினி கிடைக்கிலே;
பார்த்தனானும் பாவியனேனே
என்றெண்ணம் வந்திடிச்சோ?
தனியா தவி தவி தவிச்சிரிச்சோ?
கொடி இறந்த கவலையிலே
தன்னைதானே அழிச்சிருச்சோ?
தன்னுயிர் துறந்திருச்சோ?
வாயில்லா ஜீவனுக்கும்
வற்றாத அன்பிருக்கு
வாருங்கள் அன்பு செய்வோம்.

கருத்துகள்
மிகவும் அருமையான அன்புக்
மிகவும் அருமையான அன்புக் கவிதை நண்பரே......
செடி கொடிகளுக்கிடையையும் அன்பை உணர்ந்துள்ளீர்....
"வாயில்லா ஜீவனுக்கும்
வற்றாத அன்பிருக்கு
வாருங்கள் அன்பு செய்வோம்"
நல்ல ஒரு அறிவுரை கூறும் முடிவுரை.....

வாயில்லா ஜீவனுக்கும் வற்றாத
வாயில்லா ஜீவனுக்கும்
வற்றாத அன்பிருக்கு...எனும் சொல் நூற்றுக்கு நூறு உண்மை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் வாடிய இராமலிங்க சுவாமிகளின் உணர்வை இக்கவிதையில் காண முடிகின்றது. அருமையான கவிதை. வாழ்த்துகள்.
நல்லக் கருப் பொருள் கொண்டு
நல்லக் கருப் பொருள் கொண்டு அதனைக் கையாண்ட திறமைப் பாராட்டுக்குறியது நண்பரே டணிஸ்கரன்! அக்கவிதையில் தாங்கள் ஒன்றியுள்ளமை மிகவும் அற்புதம்! அன்பு செய்வோம் என மக்களை அழைக்கும் உமக்கு எனது பாராட்டுக்கள்!

இதுவரை வாழ்த்தியோர் எல்லாம்
இதுவரை வாழ்த்தியோர் எல்லாம் பெரியோர்; இங்கு நான் அற்ப சிறியோன்.... வளமான வார்த்தைகளால் வார்த்தெடுத்திருக்கின்றீர் கவிதையை பணிவுகலந்த பாராட்டுக்கள்;
:clஅப்: :heaர்ட்:

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
உன் பாவினிலே இயற்கையை
உன் பாவினிலே
இயற்கையை உணருகிறேன்...
இயற்கையை அழித்தால்
வரும் கேட்டைப் படிக்கிறேன்...
நல்ல பாடு பொருள்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வாயில்லா ஜீவனுக்கும் வற்றாத
வாயில்லா ஜீவனுக்கும்
வற்றாத அன்பிருக்கு
வாருங்கள் அன்பு செய்வோம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...














