Skip to main content

வாராய் என் தமிழே நீ வாராய்...!

URI: http://tamilnanbargal.com/node/41390
கருத்துகள்: 24Likes: 6425 viewsசிறப்பு பதிவு

வாராய் என் தமிழே நீ வாராய்...!

kumaran16's படம்
வாராய் என் தமிழே நீ வாராய்
வந்தாலே போதும் நான் வாழ…

நீயாக வந்தால் தான் வலிமை…
வாராமல் போனாலோ கொடுமை…
நீ வந்து நிழல் தந்து
நீயாக நான் வாழ
                            … வாராய் என் தமிழே நீ வாராய்
                               வந்தாலே போதும் நான் வாழ…

உயிரோடு உறவாட
உணர்வோடு நடை போட
கனவோடுக் கடைபோட
அழகாக விளையாடி…
                         … வாராய் என் தமிழே நீ வாராய்
                            வந்தாலே போதும் நான் வாழ…

சந்தங்கள் சதுராட
சிந்து தான் உறவாட
தந்தாலும் குறையாமல்
முந்தி எழுந்தே தான் முழுதாய்
                          … வாராய் என் தமிழே நீ வாராய்
                              வந்தாலே போதும் நான் வாழ…

அழித்தாலும் அழியாத
அதிகாரப் பதிவாக
உயிர்க் கூட்டின் மொழியாக
உனைக் கூடி உயிர் வாழ
                                … வாராய் என் தமிழே நீ வாராய்
                                  வந்தாலே போதும் நான் வாழ…

எழில் நாடு மிதையங்கள்
துணையோடு தனை சேர்க்க
விழியாலே வழிதேடி
உளம் போகும் வழி சொல்ல
                                 … வாராய் என் தமிழே நீ வாராய்
                                    வந்தாலே போதும் நான் வாழ…

குயில் பாடும் இசைக் கூட்டும்
உனைப் பார்த்து எழில் சேர்க்கும்
அழிவில்லா இசைப்பாட்டு
அழகாக்கும் வழி கூற
                       … வாராய் என் தமிழே நீ வாராய்
                          வந்தாலே போதும் நான் வாழ…

மனதோடு அழகான
உயிர்ப் பாடம் உனதாக
கனவோடு கலையாத
நிலையாக என்னுள்ளே
                      … வாராய் என் தமிழே நீ வாராய்
                         வந்தாலே போதும் நான் வாழ…

அதிகார வெண்பாட்டும்
பரிமாறும் அடையாளாம்
அலையாக அலைமோத
ஆனந்தம் நிலையாக்க
                           … வாராய் என் தமிழே நீ வாராய்
                              வந்தாலே போதும் நான் வாழ…

தாளத்தில் வஞ்சிப்பா
தருக்கத்தில் கொஞ்சித்தான்
ஆளத்தான் நன்கலிப்பா
ஆசிரிய னாகிதான்
                     … வாராய் என் தமிழே நீ வாராய்
                         வந்தாலே போதும் நான் வாழ…

விருத்தங்கள் நிறுத்ததில்
பொருத்தங்கள் வருத்தத்தில்
இருந்தாலும் எல்லாமே
உனதாக்கிக் கொண்டாயே
                      … வாராய் என் தமிழே நீ வாராய்
                         வந்தாலே போதும் நான் வாழ…

தளையோடும் அசையோடும்
விளையாடும் சந்தங்கள்
இளைக்காத பந்தங்கள்
குளையாத யாப்போடு
                           … வாராய் என் தமிழே நீ வாராய்
                              வந்தாலே போதும் நான் வாழ…

கலை யெல்லாம் உனதாக
படை கொண்ட பரிவாரம்
எடை போடமுடியாமல்
நடை போட்ட புகழ் சூடி
                         … வாராய் என் தமிழே நீ வாராய்
                            வந்தாலே போதும் நான் வாழ…

நீயின்றி உயிர் வாழ்தல்
இயலாதே என்னாலே
நீ தானே என் தெய்வம்
எந்நாளும் வழிகாட்ட
                       … வாராய் என் தமிழே நீ வாராய்
                           வந்தாலே போதும் நான் வாழ…

தேனமுதின் சுவை போல
திகட்டாத வரந்தந்து
நி எந்தன் உயிராக
நாள்தோரும் பயிராக
                          … வாராய் என் தமிழே நீ வாராய்
                             வந்தாலே போதும் நான் வாழ…

வளமெல்லம் உனைத் தேடி
வாழ்வாகத் தான் வாழ
அளவில்லா ஆசையில்
அன்போடு உனைக் கூட
                     … வாராய் என் தமிழே நீ வாராய்
                         வந்தாலே போதும் நான் வாழ...

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

குயில் பாடும் இசைக் கூட்டும்
உனைப் பார்த்து எழில் சேர்க்கும்
அழிவில்லா இசைப்பாட்டு
அழகாக்கும் வழி கூற
வாராய் என் தமிழே நீ வாராய்
 
என்று இசையோடு பாபுனைந்த
நண்பா
பாடு நண்பா பாடு 
இசையோடு தமிழ் பாடவே
நாம் பிறந்தோம் நண்பா
இசையோடு பாபுனைந்து 
தமிழ் பாட வாழ்த்துகள்!
 

Ponvannan's படம்

உயிரோடு உறவாட

உணர்வோடு நடை போட

கனவோடுக் கடைபோட

அழகாக விளையாடி…

                         … வாராய் என் தமிழே நீ வாராய்

                            வந்தாலே போதும் நான் வாழ…

தமிழாலே கவிபாடி தமிழுக்கு அணிசேர்க்க வந்த தமிழ் உள்ளமே. வாழ்த்துகிறேன் உம்மையே.
 

pakee's படம்

                     

வாழ்க்கை சிலருக்கு செம்பருத்தி போல, 
உடனே பூத்து விடுகிறது பலருக்கு குறிஞ்சி போல...♥

www.PakeeCreation.Blogspot.Com

வாராய் என் தமிழே நீ வாராய்
 வந்தாலே போதும் நாம் வாழ.................

ஒவ்வொரு வரியும்  அருமையானவை!