வரம் தந்தருள்வாய் வரதா June 10, 2011 by Padma's Pass time | Edit வரம் தந்தருள்வாய் வரதா ஷ்ரவணம் நற் சொற்களைகேட்கும் செவிகளை வரமாக தரவேண்டும் நல்லதை கேளாத செவிகளிருந்து என்ன லாபம்? ஸ்மரணம் இனிதே பேசி இறைவனை துதிக்கும் நாவு எனக்கு வரமாக தரவேண்டும் வம்புகள் பேசி வார்த்தையால் புண்படுத்தும் நாவினால் எனக்கு நஷ்டம் கீர்த்தனம் நாராயணா என்று நாம கீர்த்தனம் செய்யும் மன நிலை எனக்கு வேண்டும் கீர்த்தனை செய்யாதிரில் என் மனம் குழம்பித்தான் போகும் அர்ச்சனம் பல்வகை புஷ்பங்களயும் துளஸியையும் அர்ச்சனை செய்யும் கை எனக்கு வேண்டும் ஆண்டவனை அர்ச்சிக்காத கரங்கள் எனக்கு வேண்டாம் வந்தனம் உனக்கு வந்தனம் செய்து உன்னதமாக உயிர் வாழ எனக்கு வரம் வேண்டும் வணங்காமுடியாக இருப்பின் வெறுப்புக்கு ஆளாவேன், அது எனக்கு வேண்டாம் தாஸ்யம் எத்தருணத்திலும் அடக்கமுடன் இருக்க தாஸ்ய குணம் வரமாக தரவேண்டும் எப்பொழுதும் உனக்கு நான் தாஸ்யமொடு அடி பணிய அருள் தர வேண்டும் பாத பூஜனம் பெற்றோர், பெரியவர் தம் பாத பூஜை செய்யும் பக்குவ மனம் எனக்கு வரமாக நீ தர வேண்டும் உன் பாதங்களே கதி எனும் உணர்வு என்னுள் என்றென்றும் இருக்க வரம் தர வேண்டும் ஸாக்யம் உற்றார், உறவினர், சுற்றார், நண்பர்களொடு உன்னதமாக பழகும் நற் குணம் எனக்கு வரமாக தர வேண்டும் அர்ச்சுனனுக்கு நீ தோழனாகி புகட்டிய கீதையை நான் என்னாளும் மறவாதிருக்க வேண்டும் ஆத்ம நிவேதனம் என்னுள்ளும் மற்ற உயிரனங்களினுள்ளும் ஒரே ஆத்மா என்று நான் எப்பொழுதும் நினைவில் வைக்கும் வரம் நீ தர வேண்டும் அனைத்து உயிரனங்களும் உன் அம்சம் எனும் தத்துவத்தை நான் எக்கணமும் மறவாதிருக்க வேண்டும் நவரச வரங்களை நான் வேண்டுகிண்றேனப்பா வரம் தந்து அருள மாட்டாயா வரதா? தாமரைச்செல்வி ஆன்மிக கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 118 views கருத்துகள் வரம் தா வரதா!--இடையில் உள்ள வரம் தா வரதா!--இடையில் உள்ள ம் --கவனியுங்கள்.ரகசியமே அது தான். சிவதவசி Log in to post comments Log in to post comments கேட்க வேண்டியது தான் கேட்க வேண்டியது தான் நம் கடமை! கேட்கும்போதே அதை பெற்றவராவீர்கள்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
வரம் தா வரதா!--இடையில் உள்ள வரம் தா வரதா!--இடையில் உள்ள ம் --கவனியுங்கள்.ரகசியமே அது தான். சிவதவசி Log in to post comments
கேட்க வேண்டியது தான் கேட்க வேண்டியது தான் நம் கடமை! கேட்கும்போதே அதை பெற்றவராவீர்கள்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
உடலுறவு கொண்டாலே அது சட்டரீதியான திருமணம்! உடலுறவு கொண்டாலே அது சட்டரீதியான திருமணம் தான் என்பதை ஆதரிக்கிறீர்களா? பேசலாம் வாங்க! ஆதரிக்கிறேன் இது தவறான முடிவு