உடலாக நானிருக்கின்றேன் - நீ
உயிராய் இருக்க வரம் கொடு ....!
உள்ளமாக நானிருக்கின்றேன் - நீ
உணர்வாய் இருக்க வரம் கொடு ....!
எண்ணமாக நானிருக்கின்றேன் - நீ
எழுத்தாய் இருக்க வரம் கொடு ....!
சிந்தனையாக நானிருக்கின்றேன் - நீ
செயலாக இருக்க வரம் கொடு ....!
புயல் காற்றாய் நானிருக்கின்றேன் - நீ
தென்றலாக மாற வரம் கொடு ....!
வான வில்லாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ணமாக இருக்க வரம் கொடு ........!
சுட்டெரிக்கும் தீயாக நானிருக்கின்றேன்
சுடரொளி தீபமாக நான் மாற வரம் கொடு ....!
ஒலியாக நானிருக்கின்றேன் - நீ
இசையாய் இருக்க வரம் கொடு .....!
வானமாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ண நட்சத்திரமாக வரம் கொடு ....!
கடலாக நானிருக்கின்றேன் - அதில் நீ
வண்ண மீன்களாக இருக்க வரம் கொடு .....!
விதையாக நானிருக்கின்றேன் - அதில் நீ
விளைச்சலாக இருக்க வரம் கொடு ....!
நிலமாக நானிருக்கின்றேன் - அதில் நீ
நெற்பயிராயிருக்க வரம் கொடு ....!
வெறும் வெள்ளைகாகிதமாய் நானிருக்கின்றேன் -அதில் நீ
கவிதையாய் இருக்க வரம் கொடு .....!
வரம் கொடு பெண்ணே வரம் கொடு .......
காதலனாக நான் இருக்கின்றேன் - என்
காதலியாய் நீ இருக்க வரம் கொடுப்பாயா?
பெண்ணே ....!!!!
கருத்துகள்
எனக்கொரு வரம் வேண்டும். இது
எனக்கொரு வரம் வேண்டும். இது போன்ற அழகான கவிதைகளை நான் மீண்டும் மீண்டும் படிக்க எனக்கு ஒரு வரம் வேண்டும். வரம் கிடைக்குமா?
"எண்ணமாக நானிருக்கின்றேன் -
"எண்ணமாக நானிருக்கின்றேன் - நீ
எழுத்தாய் இருக்க வரம் கொடு ...!" என்றவாறு
நாளொரு வண்ணம்
நல்ல படைப்பு எழுத
எனக்கும் விருப்பம் தர வேண்டும்!
--------------------------------------------
உங்கள் பதிவுகளில் இது சிறந்த பதிவெனக் கருதுகிறேன்.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
பலமாய் நானிருக்கிறேன்
பலமாய் நானிருக்கிறேன் --நீ
கவிதை எழுத வரம்
கவிதை எழுத வரம் கிடைத்திருக்கிறதே. அதுவே பெரும்பாக்கியம்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வரம் கேட்கும் தரமான கவிதை...
வரம் கேட்கும் தரமான கவிதை... கவிதை அருவியில் என் காயங்கள் மறக்க வரம் கொடு...











