ஆண்டாண்டு காலமாய்
அலுப்பு தட்டாமல்
வடைசுடுகிறாள் அந்த கிழவி
வாங்குவதற்கு தான் ஆளில்லை
ராத்திரியில் அவள்சுடும்
ரசவடைக்கு
ஏகபட்ட போட்டி
இன்னமும் எங்களூரில்;
என் அம்மா கூட
எனக்கும் ஊட்டியிருக்கிறாள்
சோறோடு அவள் வடையையும்
கதையிலே....!
தோசைக்குள்ளே வடைசுடும்
அவள் வீட்டை
அனைவரும் நிகர் என்றனர்
பெண்ணின் முகத்திற்கு;
அர்த்த ராத்திரியில்
அவள் பார்க்காத சல்லாபங்களா....?
ஆனாலும் அவள் வேறுயாரிடமும்
"அதை" பற்றி சொல்வதில்லை;
அவள் காணாமல் போன
இரவுகளில்
அடம்பிடித்து அழுது இருக்கிறேன்
அந்த ஆயாவைகாட்ட சொல்லி
அம்மாவிடம்....
இப்பொழுது கூட
விண்வெளி மைய்ய விலாசத்திற்கு
கடிதம் போட்டுள்ளேன்
எனக்கொருவடை வாங்கிதர சொல்லி....
ஆனால் அது கிடைக்கவில்லை
அன்று அமாவாசை என்பதால்.; 
கருத்துகள்
சூடா வட போடுற வந்து
சூடா வட போடுற வந்து வாங்கிக..........

@பிரபாகரன்@
வடை நல்லாயிருக்கு
வடை நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வடை நல்லாஇருக்கு!!!!!!!!!!
வடை நல்லாஇருக்கு!!!!!!!!!!
இந்தமாதிரி ஒரு நல்ல சிந்தனை
இந்தமாதிரி ஒரு நல்ல சிந்தனை நண்பர் அரோ விற்கு மட்டும் உரித்தான மதிநுட்பத்தைக் காட்டுகின்றது! இன்னும் அருமையான உங்களது சிந்தனைகளை தமிழ் நண்பர்கள் தளத்தில் பதியுங்கள் நண்பரே!

வடை புதுசா இருக்கு! பௌர்ணமி
வடை புதுசா இருக்கு! பௌர்ணமி தவிர மத்த நாள் எல்லாம் வடையை காக்கா கடி கடிச்சது நீங்க தானா???
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு .
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு .
உ.சரவணன்
திருநெல்வேலி



















