தமிழ்க் கவிதை உலகம் 'ஹைக்கூ'வை நன்றாகவே அ_றிந்துள்ளது. 'சென்ரியு'வைக் கொஞ்சம் தெரிந்து கொண்டுள்ளது. ஆனால் பெருவாரியாக அறியாத வடிவம் 'லிமரைக்கூ'வாகும். பிச்சமூர்த்தியின் புதுக்கவிதை முயற்சிக்கு எவ்வாறு வால்ட் விட்மனும் பாரதியும் உந்துதலாக இருந்தார்களோ, அவ்வாறே என் இந்த 'லிமரைக்கூ'வகைக் கவிதை வடிவத்திற்கு ஈரோடு தமிழன்பனின், 'சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்' என்ற தமிழின் முதல் 'லிமரைக்கூ' வகைக் கவிதைகள் உந்துதலாக அமைந்தது என்பதைப் பெருமையோடு இங்குச் சொல்லிக் கொள்கிறேன். 1. கொட்டுகிறது கெட்டிமேளம் வலி பொறுக்க முடியாமல் அழுகிறது காதலனின் இதயம் 2. இறைவன் சந்நிதியில் இறைவனைவிடப் பெரிய பெரிய உண்டியல் அதற்கு நான்கு வாய்கள் 3. கல்லை எடுத்தேன் என்னைப் பார்த்து நாய் வாலாட்டியது மனிதன் மீது எறிந்தேன் 4. செய்தித் தாள் செய்திகள் இல்லை திருப்பத் திருப்ப நீச்சலுடையில் நடிகைகள் 5. நான் சொர்க்கத்தில் நுழைவதாய் நினைத்துத் துள்ளிக் குதித்ததில் விழுந்தேன் நரகத்தில் 6. விழி முந்தியது அதற்கு முன்பே ஆசை முந்தியதில் வயிறும் முந்தியது 7. தினை விதைத்தேன் உரமிட்டு களையைக் கூடப் பறித்தேன் வினையை அறுவடை செய்தேன் 8. ஐணகனமன பாடியது மரியாதையுடன் கூட்டத்தில் பொது மக்கள் அரசியல்வாதி கொட்டாவி விட்டது 9. சோர்ந்து விழுந்தேன் பாவம் அவள் தூக்கிவிட வந்தாள் காதலிக்க ஆரம்பித்தேன் 10. காக்கை குருவி எங்கள் சாதி சரி பாரதி மனிதரில் அவை எந்தச் சாதி? 11. பூ சிரித்தது வண்டு ஆசை ஆசையாய் மொய்த்தது காற்று விரட்டிவிட்டது 12. மண் பிசைந்தேன் பானைகள் பல செய்து சுட்டேன் கீழே போட்டு உடைத்தேன் 13. முட்டிமோதி முளைத்தெழும் மரத்திற்கு பூ கை குலுக்கும் வானம் கிரிடம் 14. குறை குடம் இடுப்பில் இருந்து கூத்து ஆடியது காதலர் மரணம் 15. மனம் உறங்கிப்போனது கனவுகள் வந்து கைக் கோர்த்து குடும்பம் நடத்துகிறது 16. முதற்படி வழுக்கியது இரண்டாம் படியை தளராது ஏறினேன் மூன்றாம் படியே சறுக்கிவிட்டது 17. நீ பூக் காலத்தில் கூடை நிறைய இருந்தாய் புன்னகையோடு கோயில் வாசலில் 18. காதலர்கள் திருமணம் பெற்றவர் மானம் பாவம் செய்தித்தாளில் புகைப் படம் 19. பூவைப் பறித்தேன் வண்டு தலையைச் சுற்றிச்சுற்றி வந்தது பூவை எடுத்தெறிந்தேன் 20. வசந்தம் வந்தது இலைகள் மறைவாய் ஆடை மாற்றியது குயில்கள் சீக்கை அடித்தது 21. இதயம் முழுவதும் ரணம் காதலில் வலி வலி வலி காதலர்கள் சப்த்தம் 22. உழவுக்கும் தொழிலுக்கும் வேண்டும் என்றே வந்தனைச் செய்வோம் பொருளாதார மண்டலம் 23. ஆடை அணிந்து வந்தேன் அவன் கண் ஆடையை அவிழ்த்தது முற்றும் துறந்தேன் 24. வாக்கு எங்களுக்கே இனி எங்கள் இலவசங்கள் எல்லாம் ஓட்டு மெஷினுக்கே 25. கற்பனைகள் சிலநேரம் ஆயிரம் ஆயிரம் வந்து போகும் குப்பைத்தொட்டி வழியும் 26. என் கண்ணில் நீ உன் கண்ணில் நான் பின்பு தொலைந்தது நான் நீ 27. உன் கேள்விக்கு என்ன பதில் எப்படிச் சொல்வது யோகம் ஊமைக்கு 28. வருவது இருக்கட்டும் மனத்தைத் திறந்து வை வீடு மூடி இருக்கட்டும் 29. கூந்தலை அள்ளி முடித்தாள் பிரச்சினைத் தீரவில்லை மீண்டும் கண்ணகி கூந்தல் களைந்தாள் 30. என்னில் அமர்ந்தாள் கண்ணுக்கு எட்டும் தூரத்தில் அவள் நடந்துகொண்டு இருந்தாள் 31. கோயிலில் கண்ணை மூடுவோம் பல உண்டிகளில் பணத்தைப் போடுவோம் பிச்சைகாரனிடம் சண்டை பிடிப்போம் 32. கனவுகள் கருமை வெண்மை உன் நினைவுகள் மட்டும் ஏனோ எப்பொழுதும் பசுமை 33. உண்மையில் மறைந்திருந்தாய் பொய்யில் நீ பல்லை முன்காட்டி வெளிப்படையாக இருந்தாய் 34. மொத்தமாய் ஒரு மன்னிப்பு வாரம் ஒவ்வொரு முறையும் மன்னிப்பு பாவம் பாவ மன்னிப்பு 35. ஓட்டுவங்கி நிரம்பும்போது சுவிஸ் வங்கியில் பணப் பெட்டிகள் அடுக்கப்படுகிறது 36. அனாதை இல்லத்தில் தாய் நீதி மன்றத்தின் விவாகரத்தால் மனைவி வேலைக்காரியிடம் சேய் 37. சமய போதனைகள் கத்தல் மிரட்டல் பயம் உறுத்தல் பாவம் பக்தர்கள் 38. தேன் நிரம்பி வழிந்தது வண்ணத்துப் பூச்சி பறந்து சென்றது பூ தலைக் கவிழ்ந்தது 39. அவளைத் தொட்டுவிட்டு வந்த காற்று காதோரம் சொன்னது கன்னத்தைத் தடவிக்கொண்டு 40. கடற்கரையில் கால்தடம் தேடி அலைந்தது தான் மிச்சம் அலை அழித்திருக்கலாம் 41. செப்புமொழி பதினெட்டுடையாள் சிறந்து இருந்தாள், இருந்தவள் இறந்தாள் இருபத்தோராம் நூற்றாண்டுகளில் 42. நீதிக்குச் சாட்சி உண்மையை நிரூபிக்கச் சில சமயம் பொய் சாட்சி 43. தெரிந்த மனிதர்கள் பிறந்து வளர்ந்த அதே இடம் பேசமுடியவில்லை தாய்மொழியில் 44. இதய வாசலின் முற்றத்தில் பொட்டு வைத்து கோலம் போட்டேன் சாணமிட்டு மொழுகினாள் 45. கனவில் வருகிறாள் எனக்கும் ஆடிப் பாட முடியவில்லை சிங்கப்பூர் மலேசியாவில் 46. கும்பாபிஷேகம் கோயில் குளம் சுத்தமானது, அழுக்கானது பக்தர்கள் மனம் 47. பொறுத்துக் கொள்ளுங்கள் கொஞ்சம் உண்டியல் நிரம்பி விடட்டும் படி அளக்கும் கடவுள் 48. மழையில் நனையப் பிடிக்கும் பள்ளிச் சிறுவர்களுக்கு ஏக்கம் எப்போதும் காய்ச்சல் வரும் 49. பெற்றத் தாய் அலுவலகத்தில் அழுதக் குழந்தை பால் குடித்தது வீட்டில் மாட்டுப்பால் 50. சிந்தனை செய்தேன் முடிவு எடுப்பதற்குள் தட்டுத் தடுமாறி உறங்கி விட்டேன் 51. லிங்கம் வருகிறது அவன் பக்திப் போதையில் பெண்ணுக்கு வாந்தியும் வருகிறது Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 379 views
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162