Rameshmkm's படம்

கை தட்டப்பட்டது
ஓட்ட போட்டியில் முயல் ஆமை
நடுவர்களால் நிராகரிக்கப்பட்டது

அது தவறான பாடம்
காக்கை வடையைக் கொடுத்து விட்டது
திரும்ப பாட்டியின் பேரனிடம்

தட்டில் காசுகள்
நிரம்பியதில் மகிழ்ந்தான் கருவறை பூசாரி
ரோட்டில் பிச்சைக்காரர்கள்

சூரியன் காதல்
நிலவு தீக் குளித்துச் செத்தாள்
பாவம் நட்சத்திரங்கள்

உடைந்தது சிலம்பு
கொஞ்சமும் வருந்த வில்லை பாண்டியன்
அதுவும் முத்துச் சிலம்பு

ஏ தமிழினமே!
எங்கள் மரணம் பெருமை கொண்டது
உங்கள் ஒற்றுமையின்மையை உணர்த்துமே!

அருகருகே காதலர்கள்
பூக்கள் சிரித்துக் கொண்டும் இருக்கலாம்
கண்களில் நீர்த் துளிகள்

ஒளவைக்குத் தெரிந்திருக்கும்
சுட்ட பழம் சுடாத பழம்
குழந்தையை ஏமாற்றாத மனம்

அலை பேசியில்
முத்தங்கள் மாறி மாறிப் போயின
உண்மைக் காதல்?

திருமணம் செய்து கொண்டார்கள்
விவாகரத்து பெற்ற நடிகனும் நடிகையும்
அடுத்தடுத்தப் படத்தில்

பூவும் வண்டும்
ஒப்பாரி வைத்துக் கொண்டு இருந்தது
பாவம் குயிலும் மயிலும்

இன்று பாரிக்குத் தேவை
சேர்த்தப் பணத்தைப் பங்கிட்டுத் தர
அங்கவை சங்கவை

அவள் உடலை ரசித்தது
வெளியே வந்த பட்டாம் பூச்சி
ஆடை கொஞ்சமே மறைத்திருந்தது

நரகத்தில் சிக்கிக் கொண்டேன்
லஞ்சம் வாங்க யார் இருக்கிறீர்கள்
அரசியல்வாதி சப்த்தம் போட்டான்

இன்று, உண்மைதான்
பொய் பேசாமல் வாழ முடியாது
புராண அரிச்சந்திரன்

காந்தி பிறந்தார்
வாக்குறுதி கொடுத்தார்: எல்லாமே இலவசம்
நாற்காலியில் அமர்ந்து விட்டார்

சுவிட்ஸின் வங்கி
கறுப்பு பணம் வெள்ளைப் பணம்
ஓட்டு வங்கி

மைளனமாக பெற்றோர்கள்
தொலைக் காட்சியை உருத்து பார்க்கிறது
பேசும் பொம்மைகளைக் குழந்தைகள்

நாளைத் தேர்தல்
நீயும் வா விடுமுறையைக் கழிப்போம்
நாள் முழுவதும் பாரில்

அரசியல் பிழை இழைத்தோரால்
கூற்று சிறை பிடிக்கப்பட்டு விட்டது
குண்டர் சட்டத்தில்

ஒரு துளி
நீரோடு மூடிக்கொண்ட சிற்பிக்குத் தாகம்
வடிக்கிறது கண்ணீர்த் துளி

தீபங்களுக்குத் திருவிழா
வானில் சூரிய சந்திர நட்சத்திரங்களும்
மகிழ்ந்த பெருவிழா

நீதி மன்றங்களில்
ஊசல் ஆடிக் கொண்டி ருக்கின்றன
கண் திறந்த தேவதைகள்

குயிலும் மயிலும்
மாலைகள் மாற்றிப் போட்டுக் கொண்டது
கொலை அங்கும்

உன்னுடைய வாசிப்பால்
கவிதைகள் தற்கொலை செய்து கொண்டன
இரக்கமற்றவள் அவள்

ஊமைகள் நாம்
மனசு நம்மோடு ஆயிரம் பேசும்
ஊர் நூறு பேசும்

சூரியனுக்குக் கோபம்
பனித் துளிகள் அறுவடை ஆகியிருந்தன
கம்பனுக்கும் ஏமாற்றம்

பெண்ணியம் பேசிக் கொண்டிருந்தது
ஆடை கொடுத்த பட்டாம் பூச்சிகள்
உடலை ரசித்துக் கொண்டிருந்தது

ஆணுடை தரித்தாள்
பெண் தன்மை மறந்து போனாள்
தாழ்வு மனப் பான்மையால்

கடவுளுக்குத் தெரிந்திருக்க வேண்டும்
பெண்மையின் ஆழம் தெரிந்து விட்டால்
தாய்மையின் புனிதம் கெடும்

பெண்ணியம் கற்போடு பேசும்
திருமணத்திற்கு முன் பாதுகாப்பான உறவு
நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்

மேடை பிரிக்கப் பட்டது
நடனம் ஆடி சென்று விட்டாள்
வீடு இரண்டு பட்டது

தீக் குளித்தாள் சீதை
சந்தேகம் தீர்ந்ததோ இல்லையோ, வெளிப்பட்டது
ராவனின் நன் நடத்தை

5.5
Your rating: None Average: 5.5 (2 votes)

கருத்துகள்

syedali's படம்

அழகான கவிதைகள்


5

அழகான கவிதைகள் தோழரே
வாழ்த்துக்கள் Clap Clap Clap

என்றும் கவியுடன்
அ .செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


king68's படம்

கவிதைகள் அருமை ஆனால் இவை


6

கவிதைகள் அருமை ஆனால் இவை லிமரைக்கூ வகையில் வராதே முதல் மற்றும் கடைசி வரிகளில் ரைமிங் இருக்க வேண்டும் என்று படித்ததாக நியாபகம்.

Rameshmkm's படம்

வணக்கம்.நீங்கள் கூறுவது


வணக்கம்.நீங்கள் கூறுவது ஓரளவிற்குப் பொருந்தும். ஈரோடு தமிழன்பன் தமிழுக்கு முதன்முறையாக லிமரைக்கூவை அறிமுகம் செய்து வைத்தபோது கடைபிடிக்கப்பட்டது. (அவ்வாறு சந்தம் அமைத்துக் கொண்டது ஈரோடு தமிழன்பனின் தனி உத்தி.) மூன்று வரி, சந்தம் மட்டுமே லிமரைக்கூ ஆகிவிடாது. ஹைக்கூ, சென்ரியூ வின் இணைப்புதான் லிமரைக்கூ. என்னுடைய லிமரைக்கூக்களில் சந்தத்தை முழுவதுமாகத் தவிர்த்துவிடவும் இல்லை. முதல், இறுதி அடிகள் இயைபு பெற்றுள்ளதைக் காணலாம்.