வானம்
வெறித்து அமர்ந்திருந்தாள்
கிழவி.
ஒட்டிய வயிறும்
கிழிந்த உடையுமென
மண்ணள்ளி தின்றுகொண்டிருந்தது
ஓர் பிள்ளை
சப்பத்து சப்தம்
கேட்டு நடுநடுங்கி விழுந்தான்
இளையவன்
தூரத்தில் எங்கோ
கேட்டது இன்று
கண்ணில் பட்டவளின்
கதறல்
மரமிருந்து இவற்றை மன குறிப்பெடுத்த
புத்தனின் அன்னம்
சுட்டு வீழத்தப்பட்டது
உளவு குற்றம் சுமத்தி
துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று
புத்தனும் புன்னகையோடு
கேட்டு தலையாட்டினான்
அன்னம் திரும்பாததன்
பற்றிய கேள்வி எழுப்பகூட திரணியற்று
நன்றி,
- ப்ரியன்.
கருத்துகள்
: ( காலத்தின் கோலம்
: (
காலத்தின் கோலம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
என்ன இது ஒண்ணும்
என்ன இது ஒண்ணும் புரியவில்லை
நாமே ஏற்கெனவே பேசியிருக்கோமே மேடம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
nice
nice
வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
உண்மை என்னவென்று புத்தனும்
உண்மை என்னவென்று புத்தனும் அறிவான், புத்தன் யாரென்று உலகமும் அறியும்.
>>>Selvakumar<<<
துப்பாக்கி
துப்பாக்கி வாசத்தோடு
வந்தவர்கள் புத்தனின்
காதில் ஓதினார்கள்
யாவரும் நலமென்று... அருமை தோழி......
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
எழுந்து நடந்தால் எரிமலையும்
எழுந்து நடந்தால் எரிமலையும் வழி கொடுக்கும்
மிக அருமையான கவிதை. உண்மையில்
மிக அருமையான கவிதை.
உண்மையில் இன்று புத்த பூமியில் யுத்தம் தான் நடக்கின்றது......................
இன்றைய இலங்கையில் மனித எலும்புகளை அஸ்திபாரமாக போட்டுத் தான் "புத்த பீடங்கள்" அமைக்கப் படுகின்றது..........இன்று மட்டும் புத்தர் இருந்தால் .......
மனிதர்களை அழகாக படம்
மனிதர்களை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது உங்கள் கவிதை....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..













