kirikasan's படம்

( இதுகற்பனையே! இதை ரசிக்கவும்)

தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது

வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது

பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது

கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டு முழுதும் என முடிக்கின்றது

ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது

சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது

6
Your rating: None Average: 6 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

அழகான கற்பனை


5

அழகான கற்பனை


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


kirikasan's படம்

நன்றிகள்! தங்கள் பாராட்டுகள்


நன்றிகள்! தங்கள் பாராட்டுகள் அத்தனைக்கும் சேர்த்து இங்கே பெரிதாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Selvakumarnew's படம்

அழைப்பை மறுத்தாலும், விடவா


7

அழைப்பை மறுத்தாலும், விடவா போறாங்க...


>>>Selvakumar<<<


kirikasan's படம்

ஆமாங்க ..


ஆமாங்க .. இப்படியாக

பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
கனவென்ற நிலையாகிடும்
களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
விளையாட்டு முடிவாகிடும்

தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்!