Anonymous's படம்

அந்த
இடைக்கும் எனக்கும்
இடைவெளி என்றாலும்
இடையில் எந்தவித
இடையூறும் இல்லாததால்

தலையை சாய்த்தபடி
அரைக்கண் மூடியபடி
அத்தனையும் ரசித்தபடி
ஆனந்தமாய் நான்

அமைதியாய்ப் பக்கம்வந்து
அரைநொடியில் சுழன்று
நிலையைச் சாதகமாக்கி விட்டு
நில்லாமல் நகர்ந்தது காற்று

அதிரடியாய் ஆடைவிலகி
அங்கங்கே அங்கம் தெரிய

மணிவண்ண தேகத்தில்
பிறைநாபி பளீரென வெளிப்பட

மிஞ்சிய பாகத்தில்
மிச்ச மச்சங்கள் மின்னிட

திருடனாய் நான் மட்டும்
திருவிழாவைத் தனியே ரசிக்க

அங்கங்கே அவசரமாய் ஓடி
அகப்படும் அங்கம் மறைத்து

நடப்பது தெரியாமல் இருக்கும்
வானத்தின் மானம் காக்க

துடித்துக் கொண்டிருக்கிறது
தன்னந்தனியாய் அந்த

மேகக் கூட்டம்......

8
Your rating: None Average: 8 (7 votes)

கருத்துகள்

nandhalala's படம்

இது போல் கவிதை படித்து நீண்ட


இது போல் கவிதை படித்து நீண்ட நாள் ஆயிற்று... அருமை


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


vinoth's படம்

பெரியவங்க கலக்குறீங்க


பெரியவங்க கலக்குறீங்க


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


chandru2110's படம்

வானத்தை ரசிக்கும் அழகு நன்றாக


வானத்தை ரசிக்கும் அழகு நன்றாக உள்ளது.


சந்துரு


BaLaN's படம்

என்னே ஒரு பார்வை, படிப்பவர்


என்னே ஒரு பார்வை, படிப்பவர் கண்களில் வானம் படமாய் கடைசியில் விரிந்தது பாவம் வளர் பிறை Smile
அசத்தல் கவிதை


அன்புடன்

பாலன்


joshi2010's படம்

மிகவும் சொல் நடை மிக்க


மிகவும் சொல் நடை மிக்க கவிதை..............


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


ranjitsachin's படம்

எதுகை, மோனை அருமை...


எதுகை, மோனை அருமை... கவிதையும்....

annaa's படம்

சிந்தனை சிறகு விரித்துப்


சிந்தனை சிறகு விரித்துப் பறக்கிறது..வானத்தில்..
மிக அருமை தோழரே.!


annaa