மொழியற்ற வேண்டுதல்!
====================================
அது ஒரு அந்திசாயும் பொழுது
ஆள் அரவமற்ற கோவில் சன்னதி
ஆரோ ஒருவன் ஆள்விரல் நீட்டிநீட்டி
ஆணவமாய் பேசிக் கொண்டிருந்தான்
கோவில் கற்சிலை முன்னே!
முகம் மட்டும் தெளிவாகத் தெரிய
அமைதி அழுகை ஆத்திரம்
ஏக்கம் ஏளனம் ஏதோ எதிர்பார்ப்பு
அனைத்து உணர்ச்சிகளும்
உரிமையுடன் கொப்பளிக்கப் பார்க்கிறேன்
பே... பெபே... பேபெ... பே...
பே... பெபே... பேபெ... பே...
அவன் கத்தல் அனைவருக்கும் கேட்கிறது
அவனையும் சிலையையும் தவிர!
யாருக்கும் புரியாத மொழியா அது?
கருணை உள்ளங்களும் இறைவனும் மட்டும்
புரிந்து கொண்ட மொழி அது!
அவனிற்கான என் வேண்டுதலில் யாதொரு
அர்த்தமு மில்லையென உணர்ந்தேன்.
அவன் ஏதோ சொல்ல முயற்சிக்கவில்லை;
அவன் ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருக்கிறான்!
வினோத் கன்னியாகுமரி
http://tamilnanbargal.com/friends/vinoth
கருத்துகள்
"யாருக்கும் புரியாத மொழியா
"யாருக்கும் புரியாத மொழியா அது?
கருணை உள்ளங்களும் இறைவனும் மட்டும்
புரிந்து கொண்ட மொழி அது!" என்ற வரிகள்
எனக்குப் பிடித்திருக்கிறது.
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அவன் ஏதோ சொல்ல
அவன் ஏதோ சொல்ல முயற்சிக்கவில்லை;
அவன் ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருக்கிறான்!
ஆழமான சிந்தனை!








