Skip to main content

மொந்தையில் உண்டு

URI: http://tamilnanbargal.com/node/42785
கருத்துகள்: 5Likes: 0227 views

மொந்தையில் உண்டு

DHANALAKSHMIKANNAN's படம்

மகனே! உன்விதை உன்னிலம் உன்னதமே!

தகன வாழ்வினில் தியாகமே உன்சின்னமே!
மகனே! உலகு உனக்குத் தருவதைஎண்ணி 
சகுனம் பார்த்துக் காக்காதே!
 
 உள்ளத்தில் இறையும் எண்ணத்தில் உறுதியும் 
பள்ளத்தில் பாதை படைத்திடும் தளராதே!
அள்ளுவதில் பொருள் கொள்ளல் வாழலோ?
கொள்ளுவதில் விள்ளுவதே வாழ்வே!
 
விளக்கு ஏற்றுவது இல்லத்திற்கு ஒளியே!
விளக்கு ஏற்று இல்லாத இல்லத்திற்கு!
விளக்கம் பெற்றதை மற்றவர் கொள்ளவே 
கலக்கம் கொள்ளாதே கண்ணே!
 
தோல்வி கண்டுத் துவளாமல் ஆய்ந்து 
தோல்வி தோற்க தகுதி மேற்க்கொள்
தோல்வி மாறி வெற்றியானால் மேற்கோள் 
தோளில் மாலையாய் விழுமே!
 
உதவும் செயலில் நிதமும் முயன்றால் 
கதவும் திறக்கக் கருணைக் கடவுள் 
மதகும் திறந்த மடை வெள்ளமாய் 
உதவும் உந்தன் வாழ்விலே!
 
ஒருசிறு வாய்ப்பும் ஒருசிறு உதவியும் 
மறுநினைவு கொள்ளாமல் தவற விடாதே!
மருசிறுக் கறையும் தருநிலை வேண்டாமே!
பெருமைப் பேசிச் செல்லாதே!
 
வாழ்தலின் பணியே வாழ வைத்ததிலே!
தாழ்தலின் பயனே உயர்வின் அணியே!
ஆழ்தலில் வாழ்க்கை கடலின் நீச்சல்!
மூழ்கியே முடிதல் வேண்டா!
 
எத்தனை பேருக்கு  உதவி எண்ணிக்கை 
சித்தனை வேண்டாம் சிதறிடும் எண்ணம்! [சித்தனை-சிந்தனை]
அத்தனை பேரும் அத்தனையும் பெற்றவரோ?
அத்தனை நினைத்து உதவிடு! [அத்தனை-இறையை]
 
சிறுதுரும்பு பல்குத்த உதவிடும் என்பதை 
அறிந்தவன் அறிந்ததை செயலில் சொரிந்திடு! 
குறையினும் வாழ்வின் செயலில் குறையினும் 
நிறைந்திடு வாழ்வை நிமிர்த்திடு!
 
தந்தையின் செயலில் பயன் பெற்றோர் 
சிந்தையில் கொண்டு என்வழி நடந்திடு!
விந்தை கொள்ளாதே! வித்தை உண்டே![வித்தை-அறிவு]
மொந்தையில் உண்டுத்   தந்திட!  
 
என் மகன் கார்த்திக் தன் நிழல் படம் அனுப்பியதற்கு நான் அனுப்பிய மடல் கவிதையிது!  
 
                
    
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

vinoth's படம்

படத்தில் கார்த்திக் கலக்குகிறார்

நீங்கள் கவிதையில் கலக்குறீர்கள்

             

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...