மேகங்களை கலைத்து
சந்தோஷபட்டது காற்று
விருப்பமான கனவு
கலைந்தது போல் பாரம்
தொலைந்த பொம்மை
தேடும் குழந்தையாய்
வானவீதியில் தேடி நடக்கிறேன்
வழியில் தட்டுபட்டது
கலைந்த மேகங்களின் இடையே
மிதந்து வந்த
சில பறவை இறகுகளும்...
முகத்தில் மோதிய
சில மழைதுளிகளும்...
வருத்தமாய் திரும்பும் பொழுது
மேகங்கள் மீண்டும்
இணைய தொடங்கின
ஓவியங்கள் பல உயிர் வந்து
ஓட தொடங்கின !
(4 votes)
கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on புத, 11/08/2010 - 12:21pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சட்டென நனைந்தது சட்டை.. சில
Submitted by Alagarsamy on புத, 11/08/2010 - 5:36pm.
சட்டென நனைந்தது சட்டை..
சில நொடிகள் உங்கள் கவிதைப் படத்தில் ஹீரோவாய் நான்..








