sasikumar's படம்

கனத்துபோன மனதோடு
கோயில் செல்கிறேன்.
செல்லால் அடித்து எம்மை
செல்லா காசாய்
சிதைத்தவர் கூட்டம்
நன்றாய் வாழ நீயும்
அருள் புரிந்திடுவாய் தினமும்
கல்லறை அகழும்
நரமாமிசப் பிணங்கள்
காவலிருப்பாய்
நீயே கடவுள்…!
எம்மின பெண்களை
வன்புணரும் கம்சர்கள்
போதி மரத்து கிளையுடைத்து
நிழல் படுக்கை செய்வாய்
நீயே தேவ தூதன்....!
கல்லாய் போன
கடவுளிடம் ஒரு கேள்வி
கடலளவு தமிழர் இரத்தம்
குடித்தும்
அடங்கவில்லையா
உன் தாகம் மட்டும்…?
இனிமேல் அடுப்பெரிக்கவாவது
உதவட்டும்
கிழிந்துப்போன
பகவத்கீதையும் பைபிளும் .
5.4
Your rating: None Average: 5.4 (5 votes)

கருத்துகள்

VISWAM's படம்

காலம் மாறும். எதற்கும் ஒரு


காலம் மாறும். எதற்கும் ஒரு எல்லையுண்டு. மனப்புண்ணைக் காலம் தான் மாற்றவேண்டும்.

vinoth's படம்

இக்கொடுமைகளை செய்தது பௌத்த இன


5

இக்கொடுமைகளை செய்தது பௌத்த இன கொடுங்கோல் ஆட்சியாளர்கள்..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


syedali's படம்

வார்த்தைகளில்


5

வார்த்தைகளில் அமைதியும்
செயல்களில் அதர்மத்தையும் போதிக்கிறார்கள் போதிமர வழிவந்தவர்கள்
இதிகாசங்களை புரட்டிப்பார் அதர்மம் ஜெயித்த சரித்திரம் இல்லை
காலம் மாறு புதிய விடியலுக்காக காத்திருப்போம் .....................

என்றும் கவியுடன்
அ.செய்யது அலி


ஊருக்கு நல்லது சொல்வேன் .....


kumaran's படம்

புத்தர்,இயேசு,நபிகள்


புத்தர்,இயேசு,நபிகள் ஆகியோரின் போதனைகளை சரியாக உணர்ந்து பின்பற்றாமல் ,மனிதர்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி போதனையாளர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்கள். Crying அவர்களைப்போல வாழத்தான் தெரியவில்லை, குறைந்தது அவர்கள் சொன்னவற்றை சரியாக பின்பற்றக்கூட தெரியவில்லையே இந்த பாழும் மனிதர்களுக்கு. Crying


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Ragavan's படம்

(No subject)


6

Crying


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..