(இன்று தைப்பூசத் திருநாள். இவ்வேளையில் என் மறைந்த தந்தையார் திரு வி.பி. பழனியாண்டி ஆசிரியர் அவர்கள் முருகன் மீது எழுதிய ஒரு பாடலை இங்கே சமர்ப்பிக்கின்றேன்)
முருகனை நினை மனமே
நன்மேன்மையுற தினமே
மோகன சிங்காரவடி
வேலணியும் மேலோனான
முருகனை நினை மனமே
நன்மேன்மையுற தினமே
குன்றுதோறும் நின்றாடுவான்
குறக் கோதையை மனம் நாடுவான்
கோகிலம் நிகர்த்த மொழி
குஞ்சரியாள் கொஞ்சும் எழில்
முருகனை நினை மனமே
நன்மேன்மையுற தினமே
தனியழகு கொண்ட சீலன்
தமிழின்பம் பெறும் தயாளன்
தாரகப் பொருள் தங்கும் நாமம்
பூரணத்திரு ஓங்கும் சேமம்
முருகனை நினை மனமே
நன்மேன்மையுற தினமே
கருத்துகள்
இந்நன்னாளில் தமிழ் வளர்த்த
இந்நன்னாளில் தமிழ் வளர்த்த கடவுளை நினைவோம்.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தமிழுக்கும், தமிழனுக்கும்
தமிழுக்கும், தமிழனுக்கும் முருகன் தான் கடவுள். நாம் தான் அவனை மறந்து யாரோ காட்டியவர்கலை வனங்குகிறோம்.
அன்புடன் நான் செல்வகுமார் தமிழ்மீதும்,தமிழர்கள் மீதும் ஆழ்ந்த நட்பும் அன்பும் கொண்டவன்.உங்களுடன் உறவாடுவதில் மகிழ்ச்சியுடையவன்
தமிழின் கடவுள் முருகன் -
தமிழின் கடவுள் முருகன் - அந்த
முருகனையே பாடினீர் தமிழாலே!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil








