நிசப்தங்களை கிழித்துக் கொண்டு
இருளின் காதை அடைக்கிறது
அந்த முனங்கல் சத்தம்
விசை அசைவுப் புணர்வில்
தத்தம் உணர்ச்சிகளை கொட்டும்
ஆயத்தத்தில் இரு பாலினங்கள்
முனங்கலில் வழியும் போதை
சுயத்தை நனைத்து நீத்திட
விசைவில் நகரும் பொம்மையாய் மதி
நாளத்தில் ஊருடுவி கலந்தது
சலனங்களற்ற நிசப்த இரவில்
காதில் ஓதப்பட்ட மந்திரம்
தொப்புள்கொடி உறவை வேர்பிரித்து
வேதனையின்றி மெருதுவாய் கீறுகிறது
குழைந்த மெல்லிய குரலொலி
நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
உறவு உயிர் ஓடிய
வெட்டப்பட்ட தொப்புள் கொடியில்
பதியப்பட்டது முதல் விரிசல்
(2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/08/blog-post_14.html
கருத்துகள்
இறுக்கமாகப்
Submitted by yarlpavanan on திங்கள், 15/08/2011 - 12:21am.
இறுக்கமாகப் புனைந்துள்ளீர்...
நன்று
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அருமையாய் உள்ளது என்று
Submitted by Flower on புத, 24/08/2011 - 11:47am.
அருமையாய் உள்ளது என்று தெரிகிறது.......ஆனாலும் என் சிறு அறிவுக்கு நிறைய வார்த்தைகளின் அர்த்தம் புரியவில்லை...







