நீ தலைமுடி முடியும் வேளையிலே
ஒரு கற்றை காற்றினை
கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !
தலை சுற்றி நிற்கிறது காற்று
தலைமுடியோடு மல்லிகையின்
வாசத்தின் வசம் உண்டு !
உனது பவனிக்கு பின்னால்
எனது அறையும்
அறை சார்ந்த அசையா பொருளும்
இயல்பின்றி தவிக்கின்றன !
நான் அழகா !
என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு
நேற்று வரை நல்லாய் இருந்தாய் தோழி இன்று மட்டும் உன்னில் மாற்றம் ஏனோ?கேட்டவள் வேறு யாருமில்லைபட்டு நொந்தவளின்கிட்ட நெருங்கிய தோழியே!
என்னவளே
பார்வைச் சாரலில் பறித்தாய் என்னிதயத்தை
இயல்பின்றி துடிக்கிறது என்னிதயம்
இச்சாரலடிக்க வேண்டுமடியென் இதயம் துடிப்பது நிற்கும் வரை...
ஏனோ ஒரு செயலும் அசையாது
சில நேரங்களில் இப்படித்தான்
இடிந்த சுவராய் மனம் ஏனோ
சுக்காய் நொறுங்கிப்போகும்
அமைதியுடன் கூடிய மவுனம்
அழகு மிளிரும் ஆனால் அங்கே
கண்கள் ஆயிரம் கவிதை பேசும்
எண்ணப் பிழையும் எழுத்துப் பிழையும் கண்ணின் பிழையும் கருத்துப் பிழையும் பண்ணின் பிழையும் பொருள் பிழையும் பண்ணும் பிழையெல்லாம் பொறுக்கவே!
உன் நினைவுகளே வேண்டாமென்று
கிழித்தெறிந்தேன் குப்பைத்தொட்டியில்
அடுக்கி வைத்த புத்தகங்களுக்கு