இன்பங்களில்
மலரும் புன்னகையும்
துன்பங்களில்
உதிரும் கண்ணீரும்
மனித வாழ்கையில் பதிவு செய்கிறது
வாழ்வின் அர்த்தங்களை
ஒரு முறை
உயிர்த்தெழுந்து
மனித ஜீவனை உயிரூட்டி
மறுகணம் மரணத்தை முத்தமிட்டு
நினைவு வேலிக்குள் சிறைபடுகிறது
மனிதனின் வாழ்க்கை பயணத்தின்
உன்னத தருணங்கள்
அகம்
யாசித்த அந்த தருணங்கள்
மீளாதென்று அறிந்த பின்பும்
அதன்அழகிய நினைவுகளோடு
வாழ முற்படுகிறார்கள்
இங்கே சில மனிதர்கள்
அந்த
மனிதர்களின் வரிசையில்
இதோ நானும்
(2 votes)
http://nizammudeen-abdulkader.blogspot.com/2011/12/blog-post.html
கருத்துகள்
சிறந்த கருத்துக்களைத்
Submitted by yarlpavanan on செவ்வாய், 27/12/2011 - 9:04pm.
சிறந்த கருத்துக்களைத் தந்துள்ளீர்கள் 
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நடந்தது நடந்ததுதான்.
Submitted by Ponvannan on வியாழன், 29/12/2011 - 4:37pm.
நடந்தது நடந்ததுதான். முடிந்தது முடிந்ததுதான். இறுதியில் மிஞ்சுவது நினைவுகள்தான்.
சிறப்பான கவிதை. வாழ்த்துக்கள்.







