கவிதைக்கு கடுப்பாகி விட்டது
கண்களும் பூத்து போய்விட்டது
கடைசியாய் விடுக்கிறேனடி
காதல் தூது அல்ல
கடுமையான மிரட்டல்
காதலை ஏற்று கொள்ளடி
கொள்ளாமல் கொல்லாதே
நானே இறந்து விடுவேன்
காதலை ஏற்றுக்கொள்
இல்லையேல்..........
நீ சுருட்டி போட்ட
முடியில்
சுருக்கு போட்டு செத்துவிடுவேன்
விஷமமான மொழி பேசும்
விழிகளில்
விஷம் குடித்து செத்துவிடுவேன்
கடுமையாய் வதைக்கும் உன்
கன்னக்குழியில்
விழுந்து நான் செத்துவிடுவேன்
வளைந்து வழிமறிக்கும்
புருவங்களில்
வெட்டு பட்டு செத்துவிடுவேன்
ஓயாமல் நீ கடிக்கும்
நகத்தில்
நான் நசுங்கி செத்துவிடுவேன்
ஈரமே இடமாய் கொண்ட
இதழில்
இடிக்க பட்டு செத்துவிடுவேன்
இவ்வாறு எல்லம்
இறக்கவில்லை என்றால்
இன்றுவரை என் மேல்
இரக்கமே கொள்ளாத
இதயத்தில்
புதைந்து செத்துவிடுவேன்
இது மிரட்டல் மட்டுமல்ல
என் நெஞ்சின் உருத்தல்..

கருத்துகள்
ரொம்ப மிரட்டுறீங்க பாவம் அந்த
ரொம்ப மிரட்டுறீங்க
பாவம் அந்த பொண்ணு. கொஞ்சம் யோசிக்க அவகாசம் கொடுங்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பிரமாதம்... பெண்பாவம்
பிரமாதம்...
பெண்பாவம் பொல்லாதது நண்பா
ஜாக்கிரதை! 
ஆராரோ ஆரீராரோ என் நண்பா
ஆராரோ ஆரீராரோ என் நண்பா அரோ
யார் மறுத்தார் உன் காதல் சொல்லை
வெறுப்பாலே உளறீரே சுயநலவாதியே
பொறுப்பில்லா காதலனை யார் ஏற்பார்?
எப்பெண்ணும் வெறுப்பாரே உனை
தப்பாக எண்ணாதே என்னை
கைக்கும் பொருளென ஆவீரே
வாழ்க்கைக்கு உதவாது சுயநலம்!
ஆராரோ ஆரீராரோ என் நண்பா அரோ
பெத்தவங்க உற்றவங்க உடனிருக்க
உன்னுடைய எண்ணத்துக்கு உத்திரவாதமில்லை
ஆத்திரத்தில் மற்ற பாத்திரம் மறந்தாயே!
ஆணுக்கு கண்டவிடம் பஞ்சு மெத்தை
பெண்ணுக்கு தாலிக்கட்டியவனே கடைசிவரையெல்லாம்
அறியாத வயதிலே காதல் வந்தால்
வெறும் கனவுடனே நிறுத்திக் கொள்ளவேண்டும்!
வாலிப முறுக்கிலே காதல் கொண்டால்
வாழ்க்கை பொறுப்பிலே தோல்வி வரும்
உன்னை நீ நம்புகின்றாய் உண்மைதான்
அந்த பெண்பிள்ளைக்கு உன் மீது நம்பிக்கையில்லை
வெறுக்காதே வெதும்பாதே என்னையுமே
காதலென்றால் வழிபோக்கில் ஒதுங்குமிடமில்லை
பெண்ணென்றால் போடுகின்ற செருப்புமில்லே
தவறிப் போனால் மதிப்பாரும் பொருப்புயாருமில்லே
ஆராரோ ஆரீராரோ என் நண்பா அரோ
கவிதையது ஏட்டுக்கும் படிப்பதற்கும் நன்று
நல்லக்கவிதை என்றவரிடம் பெண் கேட்டுப்பாரு
உன்னை ஒடவிடுவார் இல்லையெனிலவர் ஓடுவார்
தவறாக நினைக்காதே தங்கமே
உமக்கு காதலிக்க இன்னும் இல்லை பக்குவமே
நீ நினைக்கும் எண்ணம் போல் இல்லையென வருந்தாதே
கோபத்திற்கு ஆட்பட்டால் வாழ்க்கை பொருந்தாதே!


















