விதவிதமாய் அழகுணர்த்தும் உலகு வினோதமாய் அறிவுள்ள உயிரினங்கள் அதில் மானிடம் தனித்து தரமென உணவிற்கென உயிர்களெல்லாம் வாழ உயிர் கொன்று புசிக்கும் சிலவற்றுள் ஆன்மநேயம் பேசும் மானிட விலங்கு வேடிக்கையாய் இருப்பது மானிடர்க்கு மட்டும் இயற்கையென அனைத்துயிர்களும் வாழ அறிவுறுத்தல் மானிடர்க்கு மானிடர் வழியில் என்றும்:சுஷ்ருவா பொது கவிதைகள்General Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 417 views கருத்துகள் கொல்லான் புலாலை மறுத்தானைக் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். என்று வள்ளுவர் சொன்னது நல்ல மனமுடைய மனிதனுக்கு மறந்துவிட்டதோ? Log in to post comments நல்ல மனிதர்கள் அச்சத்தில் நல்ல மனிதர்கள் அச்சத்தில் சிவனேனென்று இருக்கின்றார்கள் ஐயா! Log in to post comments நல்ல மனிதர்கள் அச்சம் நல்ல மனிதர்கள் அச்சம் கொள்வார்கள் தான்! ஆனால், அஞ்ச வேண்டியவற்றுக்கு! அவர்கள் அனைத்துயிருள்ளும் தன் ஆன்மாவை, சீவனை காண்பதால், அதுவே சிவனென்று உணர்ந்ததால்.... அவற்றை துன்புறுத்த வேண்டுமே என்று அஞ்சி வாழ்கிறார்கள்! நீங்கள் நினைப்பது, குளித்துவிட்டு ஒதுங்கிப்போகும் யானையை கண்டு பன்றி சிரித்த கதையாய் இருக்கிறது! வார்த்தையின் திறனுணர்ந்து உபயோகியுங்கள்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments நண்பரே ஒன்றை எப்போதும் நம் நண்பரே ஒன்றை எப்போதும் நம் மனதில் பாதிய வைத்துக் கொள்ள வேண்டியது சில மனிதனாக பிறந்தவர்களுக்கு மிகவும் அவசியம் அது "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" எனும் மந்திரச் சொல்லை தான், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக தனது பொல்லா சிறகு விரித்தாடிய கதை உமக்கு தெரியாதது இல்லாயே, இவற்றைப் போல் நிறைய உவமை மற்றும் உதாரணச் சொற்கள் ஆறறிவு படைத்த மனிதவிலங்குகளுக்கு ஐந்தறிவு படைத்த விலங்கினத்தைத் தான் எடுத்துக்காட்டாக நிறைய பெரியோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள் என்பது தங்களுக்கு தெரியாததில்லை, கவிதையின் வரிகளை மீண்டும் ஒருமுறைக்கு மறுமுறை நிறுத்தி நிதானத்துடன் படித்தால் உமக்கு அதன் கருத்து நன்றாக விளங்கும் என்று நினைக்கின்றேன், உமக்கு நிறைய விளக்கங்களை நான் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கின்றேன், நாம் ஒருக்கருத்தை சொல்வதற்கு முன் நாம் அதற்கு தகுதிதானா என்பதை சிந்தித்து செயல்படுவது நன்றென பெரியோர்கள் சொல்லியுள்ளது அனைத்தும் அறிந்த உமக்கு தெரியாததில்லை வார்த்தையின் திறனுணர்ந்து பதிலளித்துள்ளேனா நண்பரே! என்றும்:சுஷ்ருவா Log in to post comments நண்பரே, நான் தங்களின் நண்பரே, நான் தங்களின் கவிதைக்கிங்கு கருத்துரைக்கவில்லை! தங்களின், "நல்ல மனிதர்கள் அச்சத்தில் சிவனேனென்று இருக்கின்றார்கள் ஐயா!" எனும் வரிகளுக்குத் தான் கருத்துரைத்தேன். அந்த வரிகளிந்த மூடனுக் குணர்த்திய பொருளின் காரணத்தினால் இந்த கோபம் விளைந்ததேயன்றி வேறோன்றிர்க்கில்லை. நான் தவறாய் புரிந்துகொண்டேனோ என நேற்றே யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கு மன்னிப்புக் கோரலாம் என்றும் நினைந்திருந்தேன். மனம் நோகச்செய்தமைக்கு மனம் நோகிறேன்! வருந்தி, மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். "நல்ல மனிதர்கள் என்றிருப்பவர்கள் (என்று வேடமிட்டிருப்பவர்கள்), பயத்தினால் சிவனைத் தொழுகிறார்கள்" என்பது நான் புரிந்து கொண்டது. மன்னிக்கவும். அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments தவறாக புரிந்து கொண்டமைக்கு தவறாக புரிந்து கொண்டமைக்கு எனது வருத்ததை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே! Log in to post comments சிறந்த வரிகள் சிறந்த வரிகள் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments நன்றி அன்பரே! நன்றி அன்பரே! Log in to post comments நல்ல கவிதை நல்ல கவிதை Log in to post comments நன்றி நண்பரே! நன்றி நண்பரே! Log in to post comments ஆன்மநேயம் பேசும் மானிட ஆன்மநேயம் பேசும் மானிட விலங்கு புலி மானைக்கொல்லக்கூடாது என கூற மனிதனுக்கு உரிமையில்லை. அப்படி கூறினால் அது இயற்கையை எதிர்ப்பதாகும். ஆனால் இதை மனிதனுக்கு கூறலாம். வலிக்கும் மனம் கொண்ட மனிதன் மற்ற உயிர்களின் வலியையும் உணரல் வேண்டும். இதை கவிதையில் கூறியிருக்கிறீர்கள். வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நன்றி நண்பரே! நன்றி நண்பரே! Log in to post comments மனிதவிலங்குகளுக்கு ஐந்தறிவு மனிதவிலங்குகளுக்கு ஐந்தறிவு படைத்த விலங்கினத்தைத் தான் எடுத்துக்காட்டாக நிறைய பெரியோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்.... இதுதான நிசர்சனமான உண்மை....... மரத்துக்கு மரம் தாவல் குரங்கின் இயல்பு பேச்சுக்கு பேச்சு பேசுதல் மனிதன் இயல்பு மாறாத இயற்கை........... Log in to post comments நன்றி நண்பரே!! நன்றி நண்பரே!! Log in to post comments
கொல்லான் புலாலை மறுத்தானைக் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும். என்று வள்ளுவர் சொன்னது நல்ல மனமுடைய மனிதனுக்கு மறந்துவிட்டதோ? Log in to post comments
நல்ல மனிதர்கள் அச்சத்தில் நல்ல மனிதர்கள் அச்சத்தில் சிவனேனென்று இருக்கின்றார்கள் ஐயா! Log in to post comments
நல்ல மனிதர்கள் அச்சம் நல்ல மனிதர்கள் அச்சம் கொள்வார்கள் தான்! ஆனால், அஞ்ச வேண்டியவற்றுக்கு! அவர்கள் அனைத்துயிருள்ளும் தன் ஆன்மாவை, சீவனை காண்பதால், அதுவே சிவனென்று உணர்ந்ததால்.... அவற்றை துன்புறுத்த வேண்டுமே என்று அஞ்சி வாழ்கிறார்கள்! நீங்கள் நினைப்பது, குளித்துவிட்டு ஒதுங்கிப்போகும் யானையை கண்டு பன்றி சிரித்த கதையாய் இருக்கிறது! வார்த்தையின் திறனுணர்ந்து உபயோகியுங்கள்! அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
நண்பரே ஒன்றை எப்போதும் நம் நண்பரே ஒன்றை எப்போதும் நம் மனதில் பாதிய வைத்துக் கொள்ள வேண்டியது சில மனிதனாக பிறந்தவர்களுக்கு மிகவும் அவசியம் அது "கற்றது கையளவு கல்லாதது உலகளவு" எனும் மந்திரச் சொல்லை தான், உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக தனது பொல்லா சிறகு விரித்தாடிய கதை உமக்கு தெரியாதது இல்லாயே, இவற்றைப் போல் நிறைய உவமை மற்றும் உதாரணச் சொற்கள் ஆறறிவு படைத்த மனிதவிலங்குகளுக்கு ஐந்தறிவு படைத்த விலங்கினத்தைத் தான் எடுத்துக்காட்டாக நிறைய பெரியோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள் என்பது தங்களுக்கு தெரியாததில்லை, கவிதையின் வரிகளை மீண்டும் ஒருமுறைக்கு மறுமுறை நிறுத்தி நிதானத்துடன் படித்தால் உமக்கு அதன் கருத்து நன்றாக விளங்கும் என்று நினைக்கின்றேன், உமக்கு நிறைய விளக்கங்களை நான் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கின்றேன், நாம் ஒருக்கருத்தை சொல்வதற்கு முன் நாம் அதற்கு தகுதிதானா என்பதை சிந்தித்து செயல்படுவது நன்றென பெரியோர்கள் சொல்லியுள்ளது அனைத்தும் அறிந்த உமக்கு தெரியாததில்லை வார்த்தையின் திறனுணர்ந்து பதிலளித்துள்ளேனா நண்பரே! என்றும்:சுஷ்ருவா Log in to post comments
நண்பரே, நான் தங்களின் நண்பரே, நான் தங்களின் கவிதைக்கிங்கு கருத்துரைக்கவில்லை! தங்களின், "நல்ல மனிதர்கள் அச்சத்தில் சிவனேனென்று இருக்கின்றார்கள் ஐயா!" எனும் வரிகளுக்குத் தான் கருத்துரைத்தேன். அந்த வரிகளிந்த மூடனுக் குணர்த்திய பொருளின் காரணத்தினால் இந்த கோபம் விளைந்ததேயன்றி வேறோன்றிர்க்கில்லை. நான் தவறாய் புரிந்துகொண்டேனோ என நேற்றே யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கு மன்னிப்புக் கோரலாம் என்றும் நினைந்திருந்தேன். மனம் நோகச்செய்தமைக்கு மனம் நோகிறேன்! வருந்தி, மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். "நல்ல மனிதர்கள் என்றிருப்பவர்கள் (என்று வேடமிட்டிருப்பவர்கள்), பயத்தினால் சிவனைத் தொழுகிறார்கள்" என்பது நான் புரிந்து கொண்டது. மன்னிக்கவும். அன்புடன், சுந்தரேசன் புருஷோத்தமன் Log in to post comments
தவறாக புரிந்து கொண்டமைக்கு தவறாக புரிந்து கொண்டமைக்கு எனது வருத்ததை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே! Log in to post comments
சிறந்த வரிகள் சிறந்த வரிகள் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
ஆன்மநேயம் பேசும் மானிட ஆன்மநேயம் பேசும் மானிட விலங்கு புலி மானைக்கொல்லக்கூடாது என கூற மனிதனுக்கு உரிமையில்லை. அப்படி கூறினால் அது இயற்கையை எதிர்ப்பதாகும். ஆனால் இதை மனிதனுக்கு கூறலாம். வலிக்கும் மனம் கொண்ட மனிதன் மற்ற உயிர்களின் வலியையும் உணரல் வேண்டும். இதை கவிதையில் கூறியிருக்கிறீர்கள். வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
மனிதவிலங்குகளுக்கு ஐந்தறிவு மனிதவிலங்குகளுக்கு ஐந்தறிவு படைத்த விலங்கினத்தைத் தான் எடுத்துக்காட்டாக நிறைய பெரியோர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்.... இதுதான நிசர்சனமான உண்மை....... மரத்துக்கு மரம் தாவல் குரங்கின் இயல்பு பேச்சுக்கு பேச்சு பேசுதல் மனிதன் இயல்பு மாறாத இயற்கை........... Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162