Skip to main content

மானிடரே!

URI: http://tamilnanbargal.com/node/40952
கருத்துகள்: 4Likes: 0377 views

மானிடரே!

அரியும் சிவனும் ஒன்னு 

அறியாதவன் வாயில் மண்ணு 
பெரியோர் சொன்னது அன்று 
சிறியோன் சொல்வது இன்று !
 
மழித்தலும் நீட்டலும் வேண்டா 
அழியாக் குறளின் வேண்டல் 
வழித்தல் சிகையும் மழித்தலோ? 
பொழியும் சிகையும் நீட்டலோ?  
 
திருநீறு பூசல் மழித்தலோ?  
திருமண்  பூசல் நீட்டலோ?
விரும்பும் சமயக் குறிகளை 
விரும்பா இமயக் குறளே!
 
மாலனோ நீல அழகன் 
மறையவனோ நீல கண்டன்!
அலைமகள்  மார்பன் பாற்கடலில்
மலைமகள் பாகன் மயானத்தில்!
 
அறிதுயில் பஞ்சணை அரவு 
அறிவுதுயில் தோளில் அரவு 
அரைக்கும் சந்தன அழகன் 
எரிக்கும் சாம்பல் அம்பலன்!
 
வேறிரு துருவ இணைப்பு 
வேறிரு பிரிவின் இணைப்பு 
காரிருள் நீக்கும் கதிரவன் 
பாரினில் பகுதி பகுதியாய்! {கதிரவன் -உலகின் ஒரு பகுதிக்கு ஒளி தர ,ஒரு பகுதி இருள் .அப்பகுதிக்கு ஒளி தர மறு பகுதி இருள்.ஆனால் ஒன்றே!}
 
மாறும் நீரின் நிலைகள் 
சேரும் ஆழக் கடலில் 
கூறிடும் கடலோ பெரிது 
சேரும் நீரும் கொள்ளும்!
 
எவ்வழி ஆயினும் வலிய
அவ்வழி செல்ல கலந்திடும் 
நீரலைக் கடலே!தம்வழிப் 
பரப்பி உயர்வே வேண்டாம்!
 
இருபிரிவு ஒரு மதத்தில் 
பலபிரிவு தரும் மதத்தில் 
அளப்பரிய இவை அனைத்தும் 
முளைப்பது ஒன்றில் தானே!
 
ஒன்றே பிரம்மம் அதிலும் 
நன்றே பரப்பிரம்மம் என்பதை 
இன்றே உணர்வீர்! இறையில்
நன்றே உறைவீர் மானிடரே!  
 
 
 
        
   
 
 
 
         
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

Ponvannan's படம்
விரும்பும் சமயக் குறிகளை 
விரும்பா இமயக் குறளே!

இன்றைய உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பது 
சமய‌ வேறுபாடுகள்தாம். எப்பொழுது மனிதன் இதை 
உணருகின்றானோ அன்றே உலகம் இனிமையானதாக
 மாறி விடும்.

நல்ல கருத்துக்கள் அடங்கிய கவிதை. வாழ்த்துக்கள்.

ஒன்றே பிரம்மம்
இன்றே உணர்வீர்! இறையில்
நன்றே உறைவீர் மானிடரே!

உணர்பவர் வாழ்வில் உய்வர்!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

vinoth's படம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்

உலகம் வெறுக்கும் கெட்ட காரியங்களை ஒழித்துவிட்டால்
நமக்கு வெளி வேசங்களே தேவையில்லை என்கிறார் வள்ளுவர்.

வெளி வேசங்கள் மனதை சுத்தப்படுத்தா. உள் மனம் சுத்தமாக இருந்தால் போதும்.

 

இது இறையையோ மதத்தையோ பழிப்பதல்ல.
நம் இந்து சமயமும் இதையே சொல்கிறது. வெளி வேஷம் முக்கியமல்ல. உள் மனமே முக்கியம்.

 

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...