yarlpavanan's படம்

அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!

6
Your rating: None Average: 6 (5 votes)

கருத்துகள்

rajudranjit's படம்

மக்களாயம் மாக்களாயம்


9

மக்களாயம் மாக்களாயம் ஆனதாலே
அறிவு கொடுக்கும் ஆசிரியரும் அறம் மாறிப்போனதாலே
பெற்றவரும் கற்பிக்க பிள்ளைகளை மறந்ததனாலே
கொற்றவரும் உற்றவுரிமை நினையாததாலே
வளருகின்ற தலைமுறைகள் தறிகெட்டுப் போகின்றதே
ஒருவனவன் செய்த தீமையது எல்லோரையும் பாதிக்க‌
வரும் காலம் வேரழிந்து போச்சுதே அம்மாணவனுக்கு
ஆசிரியர் கல்வியை போதிக்க மட்டுமே கடமையெனவாக‌
நல்வழிதனை பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு காட்டாமல்
காசு தேடி ஓடியாடி ஓய்ந்திருக்க சிலருக்கு அவமானம் இதுபோலே பிள்ளைகளால் நாட்டிற்கும் அவமானம்!

aro...'s படம்

வாழ்க்கையை படிக்காத வாழும்


6

வாழ்க்கையை படிக்காத வாழும் மிருகங்களால் விதைக்கபட்ட பாழும் எண்ண‌ங்களின் பிரதிபலிப்பு...

அருமையான பதிவு..... கட்டுரையாக்கி பதிந்திருந்தால் இன்னும் சிற‌ப்பாக இருந்திருக்கும்..... Clap Clap


அன்புடன்:
கவிதை கிறுக்கன்


yarlpavanan's படம்

மதிப்புக்குரிய rajudranjit,


6

மதிப்புக்குரிய rajudranjit, aro ஆகியோரின் கருத்துக்கு நன்றி. மக்களாயம்(சமூகம்) விழிப்புணர்வு பெற்றால் போதும்.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


rlalitha's படம்

(No subject)


4

Clap Clap Clap


என்றென்றும் நட்புடன்,
ரா.லலிதா குமாரி


yarlpavanan's படம்

நன்றி.


நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil