syedali's படம்

வேட்கையின் வெட்டங்களை
சிறுக சிறுக உள்வாங்கியபடி
சற்று அயர்ந்த கதிரவன்
வானம் கறுத்து இருள்சூழ
முட்டி மோதிக் கொண்டது
பார்வை இழந்த மேகங்கள்
யாத மேகச் சண்டை
கோர ஆயுதமாய் உயிர்த்தெழுந்து
இடியும் மின்னலும்
தென்றலின் சமரசத்தில்
கனிந்து இளகிய மேகங்கள்
மண்ணை முத்தமிட்டது மழைத்துளி
ழை மழை வருது
அவசரமாய் களவாடப்பட்டது
கொடியில் காயும் உடுதுணிகள்
பெரும் துளிகள் உடைந்து
சிறு துளிகளாய் கொட்டியது
பூமித் தாயின் மேனியில்
னல்பட்டு கீறிய மார்புக்கு
மருந்து கிட்டிய சந்தோசத்தில்
வறண்ட நிலங்கள்
ழுகாத இடம் தேடி
ஓடி ஒளிந்து கொண்டது
நாயும் பூனையும் கோழிகளும்
த்தமிட்டு ஊரை கூட்டியது
வெட்ட வெளியில் கட்டியிருந்த
ஆடும் மாடுகளும்
ட்டுத் துணியின்றி
நிர்வனாமாய் குளித்தது
வீதியில் நின்ற வாகனங்கள்
ங்கள் தேகங்களை நனைக்காதே
கறுப்புக்கொடி உயர்த்திய மனிதர்கள்
வீதியில் முளைத்தது குடைகள்
ன்னைக்கு வேலை கெட்டுப்போச்சு
மழைக்கு ஒதுங்கி நிற்கும்
எங்கோ புறப்பட்டு சென்றவர்கள்
னையும் சிறுவர்கள்
பயமுறுத்தும் பெரியவர்கள்
சிரித்துக் கொண்டு மழை
ந்த ஊரில் நல்லமழை
அடுத்த ஊரில் வந்துசொன்னது
அங்கு நனைந்த பேரூந்து
ழையில் குளித்தும்
தலை துவற்றாத மரங்கள்
கிளைகளில் தேங்கிய நீர்
தொப்பலாய் நனைந்து
மேனி நனைந்த வெட்கத்தில்
தலைதாழ்த்தி நிற்கும் செடிகள்
னிதக் கழிவையும்
அசுத்தங்களையும் துடைத்தபடி
ஓடைகளில் ஓடியது மழைநீர்
சிறை மீண்ட மேகங்கள்
மழைத்துளிகளாய் கொட்டிவிட
தெளிந்தது வானம்
5.4
Your rating: None Average: 5.4 (5 votes)

கருத்துகள்

vinoth's படம்

தொப்பலாய் நனைந்து மேனி நனைந்த


6

தொப்பலாய் நனைந்து
மேனி நனைந்த வெட்கத்தில்
தலைதாழ்த்தி நிற்கும் செடிகள்

இந்த வரிகள் நன்றாக உள்ளது. இயற்கையை வர்ணித்தலும் அருமை


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshini's படம்

good


5

good
Clap


Dharshini


sentamildasan's படம்

குளிர்வித்த


5

குளிர்வித்த மழையாய்
நெகிழச்செய்த கவிதை,,,
Clap Clap Oups

dharshan85's படம்

superb


5

superb
Clap Clap


Dharshan. S
Your Friend


yarlpavanan's படம்

மழையோ மழை - அது உங்கள் பா


6

மழையோ மழை - அது
உங்கள் பா மழை
எங்களையும் நனைக்கிறதே!


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil