மழையே!
உன் பெயரை
உச்சரிக்கும் போது
உள்ளத்தில் குளிர்
உணர்வு...
அவதாரங்கள் பல
எடுத்தேனும்
இப்புவியைப்
பூஜிக்கும் உண்மையான
பக்தன் நீதான்...
நீ வந்தால் தான்
மரங்கள் யாவும்
பசுமை தாண்டவம்
ஆடும் காட்சி
காண்கிறேன்...
விவசாயிக்கு நீ தெய்வம்
வியாபாரிக்கு நீயே வில்லன்
விலங்கிற்கு நீ ஆதாரம்
மரம்செடிக்கு நீயே ஜீவன்
ஆனால்
நீமட்டும் என்றும்
ஒன்றுதான்
எனக்கு....
வானில் இருந்து
நீ குதித்து வருவதை
கண்டு உனக்கொன்றும்
நேரக்கூடாதென
துதிக்கும்
பக்தனாய் நான் ...
இந்த
நண்பனைக் காண
அடிக்கடி வருவாயா?
மழையே!
உனை
முத்தமிட்டு
வரவேற்க
நானிருக்கிறேன்.......
கருத்துகள்
"இந்த நண்பனைக் காண அடிக்கடி
"இந்த
நண்பனைக் காண
அடிக்கடி வருவாயா?
மழையே!" என்பது
என் விருப்பமும் கூட...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil







