VISWAM's படம்

மழையே மழையே வாவா!
மண்ணை நனைக்க வாவா!
மழலைப் பாப்பா மகிழவே
மழையே மழையே வாவா!

தாகம் தீர்க்க வாவா!
தண்ணீர் தரவே வாவா!
மேகம் கொடுக்கும் மழையே
வேக மாக வாவா!

சின்னப் பாப்பா மழையிலே
சிறிது நேரம் நனைவதால்
என்ன செய்யப் போகுது
இறங்கி மழையே வாவா!

நன்றி : தங்கம்பழனி /http://tamil-children.blogspot.com

9
Your rating: None Average: 9 (1 vote)