பள்ளி செல்லும் வழியில்
சேற்றில் கால் வைக்காதே
அம்மா கத்தினாலும்
உள்மனம் அழுக்கு பட
ஆசையோடு ஓடி ஓடி
மிதித்து குதிக்கும்
வேகமாய் முதுகில் தாளமிட்டு
என்னை ஒப்பாரி பாட செய்து
இழுத்து செல்வாள்
வெறுங்காலில் அனைத்தையும்
மிதித்து நடந்தபடி .
என் பள்ளி சுமை
அவள் இடுப்பில்
ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும்
கருமேகம் சத்தமிட்டு
சிதறிய மழைத்துளிகள்
வேகமாய் எனை
நனைக்க உடனே
அம்மா குடை விரித்தாள்
புடவை தலைப்பினிலே ...!
என்னை நனைத்தால்
அன்பு மழையினிலே..!!
புரியாத வயதில்
ஏதேதோ செய்தாய்
எல்லாம் புரிந்த போது
எனை விட்டே போனாய் .
ஒவ்வொரு மழைக்காலமும்
உனை தூறியே செல்லும் ...!
கருத்துகள்
மீண்டுவராத காலங்களை
மீண்டுவராத காலங்களை மழைத்துளிகளைப்போல தெளித்துச்செல்கிறீர்கள் கவிதைத்துளிகளில்....
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பால்யத்தில் மழைக்காலம் வரிகள்
பால்யத்தில் மழைக்காலம்
வரிகள் மரணிக்காத பால்ய நினைவுகள்
மிக அருமை தோழரே
ஊருக்கு நல்லது சொல்வேன் .....












