எல்லை.......
மனிதன் வகுத்துக் கொண்ட
பாதை!
கடவுள்..........
மனிதனால் போற்றப்படும்
மேதை!
மனிதன்...........
கடவுளை உருவாக்கிய
பிரம்மா!
உண்மை.............
இன்று வரையில்
கண்டுபிடிக்கவில்லை!
நம்பிக்கை..........
காலமெல்லாம் வாழும்
உன்னதம்!
சிறந்தவர்.............
உன்னில் நான்
அகங்காரம்!
தாழ்மை............
என்னில் நீ
அதிகாரம்!
அன்பு...........
ஏக்கம் கொண்டோர்
ஏராளம்!
இல்லை.........
இல்லாதவரிடத்து
இருப்பவர்!
உண்டு..............
அறியாமல் குழப்பம்
அமைதியின்மை!
விலங்கு...............
அவைகளிடம் கூட
நல்மனம்!
புகழ்...........
மானுடம் கேட்கும்
பிச்சை!
அறியாமை..........
தோற்றமும் முடிவும்
ஆறாம் அறிவுக்கும்!
இரவு...........
தீயவர்களின்
தேசம்!
பகல்..........
பார்ப்பதற்கு மட்டும்
அழகாய்!
இளமை............
அது மறைந்தால்
முதுமை!
ஏன்.........
இக்கவிதையென உமக்கு
கேள்வியெழலாம்!
இப்படித்தான்............
எல்லாமும் ஒரு எல்லையென
மனிதன் வகுத்தான்!
கருத்துகள்
எல்லா குறும்பாவும் அருமை.
எல்லா குறும்பாவும் அருமை. 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஏன்......... இக்கவிதையென
ஏன்.........
இக்கவிதையென உமக்கு
கேள்வியெழலாம்!
இப்படித்தான்............
எல்லாமும் ஒரு எல்லையென
மனிதன் வகுத்தான்!

பட்டறிவால்
பட்டறிவால் விளைந்த
கோட்பாடுகளே
நல்லாயிருக்கு
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
அசத்திட்டிங்க போங்க......
அசத்திட்டிங்க போங்க...... 
அன்புடன்:
கவிதை கிறுக்கன்
விலங்கு............... அவைகளி
விலங்கு...............
அவைகளிடம் கூட
நல்மனம்!
"விலங்குகளிடையே ஒரு மனிதரையும் காண முடியாது
ஆனால் மனிதரிடையே பல விலங்குகளைக் காணாலாம்" எனும் கருத்து எனக்கு நினைவுக்கு வருகிறது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.









