yarlpavanan's படம்

என்னை
உங்களுக்கு
அதிகம் அறிமுகம் செய்பவர்கள்
என் எதிரிகளே...
எதிரிகள்
என்னைப் படிக்காதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் படித்ததைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை கள்ளச் சான்றிதழ் பெற்றவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது தகுதியின் படி
நேர்மையான சான்றிதல் எனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைக் கெட்டவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நல்லதைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் கள்ளன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நேர்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பெண்பிள்ளைப் பொறுக்கி என்பர்
ஆனால்
நீங்களோ
எனது கற்பைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பலரைக் காதலித்தவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனக்குக் காதலியில்லையெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பல மனைவிக்காரன் என்பர்
ஆனால்
நீங்களோ
என் மனைவி யாரெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அரசியல்வாதி என்பர்
ஆனால்
நீங்களோ
நான் மக்கள் தொண்டனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பொல்லாதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் நல்லவனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை இழிவுபடுத்துகையில் நம்பாமல்
நீங்களோ
என் சூழலைப் பகுப்பாய்வு செய்து
என் உண்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அழிக்க வருகையில்
நீங்களோ
என் உயிரைக் காத்த
என் சூழலிலிருந்த பொதுமக்களே!
எதிரிகளுக்குத் தெரியாதது
சான்று காட்டியே
இழிவுபடுத்த வேண்டுமென்று...
அதனாலன்றோ
என்னை
நீங்கள் பகுப்பாய்வு செய்ய முடிந்ததே
இதனாலன்றோ
உங்களுக்குள்ளே - நான்
அறிமுகமாக முடிந்திருக்கிறதே!
மக்களுக்குள்ளே என்னை இழிவுபடுத்தினால்
நான்
மக்களால் நன்கு அறியப்பட்டவனாவேனென
எப்ப தான்
எதிரிகள் படிக்கப் போகிறார்களோ
எனக்கும் தெரியவில்லையே!

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

கருத்துகள்

Ponvannan's படம்

உலகத்தைப் புரிந்துகொண்டு


7

உலகத்தைப் புரிந்துகொண்டு எழுதப்பட்ட கவிதை. ஒரு மனிதனை நல்லவர்களும் தீயவர்களும், நண்பர்களும் எதிரிகளும், என்றும் எடை போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். இதனால் அவன் மக்களால் நன்கு அறியப்பட்டவனாகின்றான். எல்லாமே மனிதப் பொறாமையினால் எழும் போராட்டங்களே. இதை யாராலும் மாற்ற‌ முடியாது.

yarlpavanan's படம்

உண்மையில் தங்கள் கருத்து,


உண்மையில் தங்கள் கருத்து, எனக்குப் பிடித்திருக்கிறது.
மிக்க நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


saravanamuthu's படம்

(No subject)


6

Clap Clap Clap

yarlpavanan's படம்

நன்றி.


நன்றி.


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil